TV

Tuesday 12 February 2013

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்


வணக்கம் நண்பர்களே  
                          காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீ ச்சு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 திடுக் திடுக்  என்று பதட்டம் அடைந்து விட்டது என் மனம் இன்று இந்த செய்தியை படித்து விட்டு,
ஒரு தலை காதலால்  ஒரு சில மனித மனம் முற்றிலும் சுயறிவற்ற விலங்கினமாக மாறி  வருகிறது  என்பதற்கு இது ஒரு  உதாரணம் 
இளைஞ்சர்களை  பையித்தியமாக ஆக்கி விட்டது.
 கற்பனை காதல்ஏற்கனவே திருச்சியில் கல்லுரி மாணவி ,சேலம் நூற்பாலையில் வேலை செய்து வந்த பெண்ணும் ,கோவையில் ஒரு பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் ஒருவன் இப்படி மாதத்திற்கு இப்பொழுது எல்லாம் இரண்டு மூன்று செய்திகள் வருகிறது  இதை போல் 
ஒரு தலை காதலால் வந்த,வக்கிரத்தின் உச்சகட்டம் ஒரு பெண்ணின் முகம் ,கை கால் சதைகள் சிதைக்கப்பட்டு,கண் பார்வை பறிக்கப்பட்டு மற்றும் உயிரும் சேர்ந்து பறிக்கப்பட்டு உள்ளது. 
இப்பொழுது அவதிபடுவது யார் பெண்ணை இழந்ததோடு இல்லாமல், இத்தனை நாள்கள் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனுபவித்த வேதனையின் வலி எத்தனையோ...  மீண்டு வந்துவிடுவார் என்று கனவோடு இருந்திருப்பார்கள் அல்லவா. 
 அந்த ஒரு தலை காதல் (தறுதலை ) பைத்தியங்கள் செய்யும் செயல் அவரை சுற்றி உள்ளவரையும் பயித்தியமாக ஆக்கி விடுகிறது 
இந்த பைத்தியங்கள்  சொல்லும் சில வசனங்கள் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள ஓன்று 
"எனக்கு கிடைக்காத ஓன்று யாருக்கும் கிடைக்ககூடாது என்பது" ,
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி விட்ட காலம் இது.
இந்த காதல் வெறியை)யாரால் ஏற்றி வைக்கபடுகிறது என்ற விவாதத்தில் முதலிடம் பிடிப்பது சினிமாதான், 
அடுத்து நண்பர்கள் வட்டம் , "ஒருத்தியும் திரும்பி பாக்கலையாட  மச்சி "ஏன்டா நீயெல்லாம் உன் பிறப்பே வேஸ்ட்டா" என்பது மாதிரி சொல்லி ஏற்றி விடும் மடையர்களின் வசனம் மீதம் இருப்பது அவர்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள், காதல் என்பதே இங்கு இருவர் முடிவு செய்ய வேண்டியது.
விருப்பம் இல்ல பெண்ணினிடம் போய் காதலி,காதலி என்றால் எப்படி ?
பிடிக்கவில்லை,என்றால் விட்டு விட வேண்டியதுதானே.அதை தொடர்ந்து மிரட்டி காதலிக்க சொல்லுவது முட்டாள்தனம் என்பது தெரியாத இந்த ஒருதலை காதலுக்கு 
ஒரு பெண் எதோச்சியமாக பார்க்கும் பார்வையை கூட புரியாமல் அந்த பெண்ணின் பின்னாலே சுற்றுவது (என் கவிதையில் கூட சொல்லி உள்ளேன் )
அப்புறம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று கதறுவது சாராய கடையில் போயி சரக்கு அடிக்க வேண்டியது 
அங்கு பொறுக்கி திங்கும் நண்பர்கள் வட்டம் அதை கொளுத்தி கொளுத்தி போட்டு கடைசியில் அந்த பெண்ணையே கொளுத்தி விடுவதருக்கு துண்டுகின்றனர்.
என்ன சொல்வது இந்த முட்டாள் நண்பர்களையும் ஒரு தலை காதலையும் 
இங்கு என்னதான் பெண் சுதந்திரம் பேசினாலும்,எழுதினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
எப்படி பெண்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வது ஒரு சொட்டு கண்ணீரை தவிர,

இன்னும் ஒரு வினோதினிக்கு இந்த கொடுமை நேருமுன் சட்டம் விழித்துக் கொள்ளுமா??
குற்றம் புரிந்தவனுக்கான கடுமையான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை பொதுஇடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

நன்றிகள் 
அன்புடன் 
த.நந்தகோபால் 


No comments:

Post a Comment