TV

Saturday, 30 June 2012

பெண் :


எனகென்று,
எப்பொழுதும்,
ஒரு கூட்டம்,
அதில்,
 நல்லவர் யார்?
கெட்டவர் யார்?
என்பதை  ,
அறிவது கடினம்.
நான் பார்க்கும் பொழுது,
எல்லாம்,
 என்னை பார்த்து,
பேசுவதில்லை ஒருவன்.
என்னையே,
என்னையே பார்த்து பேசுகிறான் இன்னொருவன்.
ஒருவனிடம்,
காதல் கடிதம் .
இன்னோருவனிடம்,
அன்பின் வார்த்தை (வித்தை)
இருவரில்,
யாரை அழைப்பது,
யாரை வெறுப்பது,
இரண்டும்,
ஒரே ஆற்றில்தான்,
பயணம் செய்யும்.
ஒரே சொல்லில்தான் முடியும்.
அது 
"படுக்கை"

Tuesday, 26 June 2012

திருமணம் :


ரோஜா மாலைக்குள்,
ஒரு,
 கை துப்பாக்கி,
அது,
பனி படர்ந்து,
செம்மண் குருதியை,
கேட்கும்,
சிறிது  சிறிதாக ---

Sunday, 24 June 2012

மரங்களின் புலம்பல்
நான் என்ன செய்வேன்,
என்ன செய்வேன் .
நான் என்ன சொல்வேன்!!!
நான் என்ன சொல்வேன்!!!
இவ்வுலகத்தில் எனகென்று,
சொந்தகளும் பந்த்ங்களும் கிடையாது.
ஆனால்,
எதிரிகள் (மனிதன்)உண்டு.
நிழல் தருவேன் நினைவில் நிற்பேன்.
ஆனாலும்,
அவனுக்கு எதிரி ஆகி விட்டேன்.
அவன் என்னை அழிக்க வந்தவன் போல் ஆகி விட்டான்.
உயிருடன் இருக்கின்ற,
ஒரு ஆட்டை வெட்டுவதை போல,
என் இனத்தை,
வெட்டி சாய்க்கும் ஒரு தரித்திரன்.
ஒற்றை வரியிலும்,
ஒரு பானை சோற்றிலும்,
ஆசை அடங்காத எமன்.
அவன் ஒரு சுய நல விரும்பி,
அவன் இனம் வாழ்வதற்கு,
என் இனத்தை அழிக்கிறான்.
ஆனால்,
பாவம் அவனுக்கு தெரியவில்லை.
என் இனம் அழிந்தால்,
அது அவன் இனத்தையும்,
ழிக்குமென்று,
தெளியாத புத்தியில் இருக்கிறான்.
நான் விடும் கண்ணீர் எல்லாம்,
அவனுடைய அடுத்த தலைமுறைக்குதான்?????????????????????????

Saturday, 23 June 2012

உஷ்ணம்


தக தக வென்று,
 அடிக்கின்ற வெயில்,
 அதனிடம்,
 தப்பிக்க நினைக்கும்,
 அவன் மனம்,
 விரைவாக,
 ஓட்டுகிறது வாகனத்தை,
தப்பிக்க முடியவில்லை அவனால்,

விபத்து?????????????

Wednesday, 20 June 2012

வாழ்க்கை:


நானும்,
யோசித்து யோசித்து பார்கிறேன்.
 இதற்கான வரிகள்,
 எதுவும்,
 தட்டுப்படவேயில்லை.
வழி நெடுங்கிலும்,
வார்த்தைகளின் பிம்பம்,
 இரண்டாக சிதறி கிடக்கிறது.
சில சந்தோஷமான வார்த்தைகள்,
பல்வேறு கடுமையான வார்த்தைகளும்  

Monday, 18 June 2012

காதல் ஒரு கண்சிமிட்டல்


 உன்னில்  தொலைந்தது,
 ஒரு  கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
 நேரத்தில்தான்,
 என் உலகம்,
 நனைத்து போகிறது.
 ஒரு மழை சாரலை போல   

Saturday, 16 June 2012

எது நம்மிடம் இல்லையோ அதை பற்றித்தான் பேச்சு

மதுஒழிப்பு  பிரசாரத்தில்,
 அனல் பறக்க,
 பேசி கொண்டு இருக்கிறார்.
 ஒரு அரசியல்வாதி,
ஆனால்,
 தொண்டர்களோ,
 கலவரத்தில் ஒரு பாட்டில் மதுவிற்காக

Thursday, 14 June 2012

குழந்தைகளின் கேலி (சந்தோசம்)


கடற்கரை மணலில்,
வீடு கட்டி சந்தோசபடும் தருணத்தில்,
இடித்து விட்டு சிரிக்கும்.
அலைகள்,
அதனை பார்த்து,
மற்ற 
குழந்தைகளின் ஆரவார சிரிப்பு ...

Sunday, 10 June 2012

சாதி சாதி சாதி

நம் முன்னோர்கள்,
 வரைந்த கேலி சித்திரம்,
தீண்டாமை கோடுகள் அது,
இன்று அவரவர் சாதிகளில் வெளிபடுகிறது,
 ஒவ்வொருவர்கள் வைத்து,
இருக்கும் பணத்தின்,
அளவை பொருத்து

Friday, 8 June 2012

வயதான குழந்தை


படிப்பாளிகள்,
பைத்தியம் என்கிறார்கள்,
பட்டாம் பூச்சி,
பிடித்து கொண்டிரூந்தவனை பார்த்து,
 ஆனாலும்,பைத்தியம் ஆவதற்க்கு,
கொடுத்து  வைப்பதில்லை,
 நம் எல்லோருக்கும் 

Wednesday, 6 June 2012

இரு உடலின் கதை


கிணற்றில் குளித்து விட்டு,
 காட்டு வழியே சென்ற எங்களுக்கு,
 கண்ணில் பட்டது.
ஒரு ஆண்னின் உள்ளாடையும்,
ஒரு பெண்னின்  உள்ளாடையும்,
 அதை பார்த்த எங்களுக்கு,
 இங்கு யாரோ   சல்லாபித்து,
இருக்க கூடும்.என்று.
கிளுகிளுப்பான நிகழ்ச்சியையும்,
 வார்த்தைகளையும்,
 ஒருவருக்கு ஒருவர் கூறிகொண்டு,
 உடம்பின் சூட்டை ஏற்றி கொண்டு இருந்தனர்.
 சிறிது தூரம் சென்ற உடன்,
 இருவரின் புது ஆடைகள்அணிந்த உடல்கள்,
 அருகு அருகே கிடந்தன.சருகுகளாய்,
 அவர்களின் உடல்கள்,
 கையில் ஒரு கடிதம் எழுதப்பட்டு இரூந்தது.
 அதில் சில வரிகள் சில ரத்த துளிகள்........ 

Sunday, 3 June 2012

கற்பனை


நகரம் வனம் ஆக மாறும்,
 தருணங்களை எண்ணி,
 வாங்கி வருகிறேன். 
எல்லா இடங்களிலும்,
மரம் இருப்பதை போல,
ஓவியத்தை............. 

கழிவுகள்


தூக்கி எறியப்பட வேண்டிய விசயங்களே,
 அதிகம் நிறைந்திருகின்றன,
என் மனதில்,
ஒவ்வொரு மனிதனின்,
 சந்திபிற்க்கு பிறகு...............