TV

Thursday 31 May 2012

வாயாடியின் வாழ்கை


வாயாடி வடிவின் வாய்,
கடைசி வரை திறக்கபடவேயில்லை,
உதட்டின் மேல்,
 இருந்த  ஈயை ஓட்ட,
 மட்டுமே,
வாய் அசைகிறது.

Wednesday 30 May 2012

கவிதையின் தாபம் !!!!


எழுத படாத கவிதை எல்லாம்,
வான் வழியே சென்று,
 இந்த உலகத்தை அனுபவிக்கிறது.
 மேகத்தில் கலந்து சந்தோஷமாக,
 பாட்டு பாடிகொண்டு இரூந்தது.
ஒரு குழந்தை அதனிடம் கேட்கிறது.
 .நீ, ஆனந்தமாக இருக்கிறாயா என்று,
அதற்கு அந்த கவிதை சொல்லுகிறது
"மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன்"
எழுத்தில் என்னை அடைக்காத வரை............           

Tuesday 29 May 2012

உன் அழகில்............

உலா  வரும்,
 
நட்சத்திர  கூட்டமெல்லாம்,
உறைந்ததடி உன்னை கண்டு,
எங்களை விட மின்னுகிறாய் என்று!!!!!!!!!!!!!!

Friday 25 May 2012

குழந்தையின் நகைச்சுவை


மரகிளையில் உட்கார்ந்த காக்கைகள்,
இரண்டும் பேசியதாம். அதில் ஒரு காக்கை,
நேற்று சாப்பிட்ட வடை நல்லாவேயில்லை என்று,
மற்ற காகம் சொன்னதாம். அந்த பாட்டி சுட்ட வடையா!
அது ரொம்ப பழசுப்பா என்று,

புத்தகத்தை பார்த்து கதை சொல்லி கொண்டு,
இருந்தது நகைச்சுவையோடு
ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பார்த்து ............   

Thursday 24 May 2012

நடிகையின் நிலை


ரசிகர்களின்,

கலர் கலரான,

கனவுகளில்,

மறைக்கபட்டது. 

அவளது,
 வெள்ளை மனம்..................

Wednesday 23 May 2012

ஒற்றை ரோசா



உன்னுடைய காதல் என்னவோ,
 ஏற்று கொள்ளப்பட்டதாய் தெரியவில்லை,
நீ கொடுத்த ரோஜா,
 அவளின் இரண்டு காலுக்குஅடியில்,
 என்னவென்று தெரியாமல்,
 கிடக்கிறது உன்னை போல,

அன்பின் பரிணாமம்

பேசவே ஆரம்பிக்கவில்லை ஆனால்,
உச்சரிக்கின்ற ப்ப.. ப்ப.. ப்ப..
வார்த்தையில்,
 சந்தோசம் அடைகிறது மனம்.
நீ செய்யும் பிழையல்லாம்,
எனக்கு சந்தோசத்தை தருகிறது.
என்
 சொந்த அறிவு எல்லாம்,
சூன்யமாகி போனது எனக்கு
,
உன்  நடையை பார்த்து,
ஆச்சரியதுடன் நிற்கிறேன்.
உலக எல்லாம் மறந்து விட்டது.
சின்னசிறு கால்களில் முத்தமிடுபோது
.......

Sunday 13 May 2012

என்ன செய்வது இந்த சிங்களனை?

மனிதன் வாழ்வது எல்லாம் இன்னொரு மனிதனின் புதைக்கப்பட்ட கல்லறையின் மேல்தான்,இது உலக நியதி,ஆனால் இறக்காத மனிதனுக்கு கல்லறை கட்டுபவன் இந்த சிங்களன் மட்டும்தான்.பெயரில் சிங்கம் இருப்பதனால்தான் இந்த விலங்கின்தனமா?அது கூட தேவையானதை அடித்து சாப்பிட்டு விட்டால் அதன் வழியே சென்று விடும்.எதனை காக்க த்தனை சதைகள்?

Thursday 10 May 2012

ஒரு உயிரின் சாபம்


ஒரு விபச்சாரியின் கதை,
 ஆரவாரத்துடன்(துன்பத்தில்),
தொடங்கி அமைதியான(இன்பத்தில்)
 கல்லறையில் முடிந்தது.பிணத்தை எரிக்க,
 யாவரும் இங்கு இல்லை .
இனி எந்த கூட்டமும் அவளை,
 தேடி வரபோவதில்லை,என்றென்றும்,
 தனிமையின்,ஆனந்த தூக்கத்தில் அவள்    .............................