TV

Tuesday, 29 January 2013

மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்!!!!!பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்
மீண்டும் துளிர்க்கும் மரங்களை போல
சிறகடிக்கும் மனமும் பார்ப்பதை எல்லாம்
அதன் போல் ஆகி விட வேண்டும் என்ற ஆசை 
இப்பவும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்
பள்ளி விடப்பட்ட ஒரு மாலை நேரத்தில்
விருட்டென்று பெய்த மழையில் நனைந்து, 
நண்பர்களுக்கு கப்பல்களை தயாரித்து அதை,
சொல்லியும் தந்த பெருமிதம் எனக்கு
மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்
வீட்டு பாடம் செய்யாமல் நண்பர்களிடம்
பேசிய ரகசியப் பேச்சுகளும்,காக்காய் கடி மிட்டாயும்,
அதில் அதிகம் நான் எடுத்து சிறிதே  இருப்பது மாதிரி
நண்பனிடம் நியாயம் கற்ப்பிததையும்
எப்படி சொல்வதை அதை, தவறே என்றாலும்
குளத்தில் மீது பட்ட கல்லை போல் அழகானஅலைகள் அது
கணக்கு பாடத்தின் நேரத்தில் எல்லாம் 
தூங்கி விட்டு அடிவாங்கியதையும்
அதே பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்து 
ஆச்சரியபடுத்தியது.இன்னும் ஆச்சரியம்தான் எல்லாமே
வண்ண வண்ண கனவுகளாக ஆகி விட்டன.இன்று
மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்!!!!!
மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்!!!
மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்!!!!!

Wednesday, 23 January 2013

இறைந்து கிடக்கின்ற என் கரிய நீர்
கருமை நிறம் தூளக்கப்பட்டது 
கரிய  எண்ணம் துகள் துகளாய் 
சிறைபடுத்துகிறது  சிறகின்றி
 என்னை 
பஸ் நிறுத்தங்களின் பாதையை  
கடக்கும் பொழுது எல்லாம் 
கூட படிக்கும் பையன்களிடம்  இருந்த
ஒரு வித அழைப்பு
"கரி பால்ட்டி போகுதடா" என்று,
ஏளன வார்த்தையின் கேலியில்
அதை கேட்டதும் பொங்கி வழியும்,
பாலை போல பொங்குகிறது என் கனத்த இதயம்
ஒளியை  தேடும் மனிதர்களின் மத்தியில்
 இருளையே துணையாக்கி கொண்டேன்.
என் விதவிதமான வண்ண கனவுகளின்,
முடிவில் எங்கும் நிறைந்திருக்கு கறுப்பு
நித்தம் நித்தம்  நினைவுகள் கூட
 களைப்பிலும் கவலையிலும் .
உருண்டு ஓடுகிறது ஒரு பாறை போல
கருவறையும் கறுப்புதான் கல்லறையும் கறுப்புதான் என்பதை
எத்தனை கவிஞ்சனும் சிந்தனைவாதியும்  சொன்னாலும் திருந்தாத
மானிடர்களை எண்ணியும்
என் கறுப்புக்கு பெற்றவர்கள்தான் காரணம் என்று 
எண்ணியும் ,அறிவில்லமால்
அவர்களை திட்டி கொண்டு யாரும் பாரவண்ணம்
 நான் நடக்கையில்
(வெள்ளை வெளிரான)தோல் நோயின்,
தம்பதிகளின் கையில்,
களையான ஒரு குழந்தை என்னை  போல   

Wednesday, 16 January 2013

ஒளிந்து கொள்ளுகின்றன கவிதைகள்நரம்பு திசுக்களில் 
திசைகள் அறியா பறவை போல் 
ஒளிந்து கொள்கிறது  கவிதை 
அதிகாலை
 ரோஜாவின் மீதுள்ள பனியும் 
நெடுநேர இரவின் அணைக்கப்படா 
வீதி விளக்கின் வெப்பத்தையும் 
பார்கிறது 
பெரும் சுவாசத்தோடு 
சோப்பு குமிழியை போல் வட்டமிடுகிறது 
காற்றின் அசைவில் அது உடைந்து அழுகிறது 
ஆனாலும் 
மின்சாரமற்ற 
வீட்டின் விரிசல்களுக்கிடையே 
வந்து விழும் 
நிலாவின் ஒளியை  போல 
அழகாக விழுகிறது
 வார்த்தை  
சில வரிகளில் 

Tuesday, 15 January 2013

பிள்ளைகள் படுத்தும் பாடு

வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்.ஒரு நாள் இரவு அழுது கொண்டு பேசினாள் சரசு கணவனிடம் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி ஆனால் வேலப்பனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான் இருக்கும் வரை நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தையாக இருப்போம் பேசமால் படு என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான் வேலப்பன். மறு நாள் காலையில் சரசு, வேலப்பனிடம் சொன்னாள்.கொஞ்ச நாள் நாம் பக்கத்துக்கு ஊரில் சம்பு அக்கா(சரசுவின் கூட பிறந்த அக்கா) வீட்டின் அருகில் இருக்கும் நம் வீட்டிற்க்கு போயி இருக்கலாம்.என்றாள்.சரி என்றான்.வேலப்பன் எப்படியோ சரசு நிம்மதியாக இருந்தால் சரி என்ற நோக்கத்துடன்,இப்போது குடி வந்து விட்டனர்.அவளின் அக்காவிற்கு முத்து ரங்கு என்று இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் உஷா ,சித்ரா என்று இரண்டு பெண் குழந்தைகள் எப்பொழுதும் அந்த குழந்தைகள் இவர்களின் வீட்டில்தான் விளையாடி கொண்டிருப்பார்கள்.சரசுவும் இப்பொழுது மிக உற்சாகமாக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.இதை பார்த்து சந்தோசம் அடைந்தான் வேலப்பன் அவனும் தன் பிள்ளைகளை போல் பாசமாக வெளிய அழைத்து செல்வது எல்லாம் வாங்கி தருவது எல்லாமும் செய்தான்.
வருடங்கள் பல ஓடின பெண்குழந்தைகளுக்கு திருமணம் ஆனது.ஆண் குழந்தைகள் பெரியவன் சூதாடியகவும்.சிறியவன் குடிகாரனாகவும் ஆகி விட்டனர் அவர்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.இன்னும் காலங்கள் ஓட ஓடஅக்காவின் மரணம் அன்று, சிறியவள் சித்ரா நம் பங்கு அம்மா என்ன வைத்துள்ளாள் என்று பெரியவள் உஷாவிடம் கேட்க மொத்தத்தில் இருவரும் அம்மாவின் நகை எவ்வளவு என்பதிலேயே குறியாக இருப்பது அம்மாவின் சாவு அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்பது சரசுவை மனம் கலங்க செய்தது.எப்படியோ ஒரு வழியாக காரியம் முடிந்து எல்லாரும் அவர் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டனர்.சரசுவின் அக்காவின் கணவனோ அந்த மகனிடமும் இந்த மகனிடமும் திட்டு வாங்கி கொண்டே வயிற்றை கழுவினர் சரசு பல முறை சொல்லியும் அவள் வீட்டிற்க்கு சாப்பிட செல்லவே இல்லை.ஒரு சில வருடங்களில் அக்காவின் கணவரும் (சுபரமணி)இறந்து விட்டார்.அன்றைய தினம்தான் அதிர்ச்சியில் உறைந்தே போயி விட்டாள் சரசு.பிணத்தை எடுக்க விடமால் சிறியவன் தண்ணியை போட்டு கொண்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்தான்.அண்ணன் தம்பி இருவருக்கும் அடிதடியில் அந்த சொத்தை எனக்கு தராவிட்டால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் என்றான் ரங்கு.அப்புறம் சரசு அழது கொண்டே சமாதனம் செய்தாள் ரங்கு கேட்கவே இல்லை.சரிடா பக்கத்தில் இருக்கிற என்னுடைய அந்த ஐந்து எக்கரவை நீ எடுத்துகடா முன்னே காரியம் நடக்க விடு என்று வழிந்தது கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் சரசு .சித்திக்காகதான் விடுறேன் என்றான் நல்லவனை போல் ரங்கு.எல்லாம் முடிந்தது.அதற்க்கு பின் யார் முகத்தையும் (சம்பு குழந்தைகளை)பார்க்கவில்லை.சில நாள்கள் மௌனத்துடன் கழிந்தது ஒரு இரவில் சாமி படத்தின் முன் சரசு கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.வேலப்பன் சரசுவின் கையை பிடித்து கொண்டு ஏன் அழுகிறாய்.
"நம்மக்குன்னு யாரும் இல்லை கொள்ளி போட குழந்தைகள் இல்லை என்று அழுகிறிய" கேட்டான் வேலப்பன.இல்லைங்கே
அந்த கவலையே இல்லைங்கே சம்பு அக்காவின் பிள்ளைகளை செய்ததை பார்த்த பின் எனக்கு கொஞ்ச நஞ்ச இருந்த ஏக்கம் எல்லாம் போயிடிச்சிங்க.பிள்ளைகள் இல்லமால் இருப்பது எவ்வளவோ பரவா இல்லை நிம்மதியகவாது போயி சேரலாம். நமக்கு குழந்தைகள் இல்லமால் செய்த கடவுளுக்கு நன்றிகள் சொல்றேன்.நம்மிடம் இருக்கும் சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமதிற்க்கு எழுதி வைத்து விடுங்கள்.இனி இங்கு இருப்பது வேண்டாங்க வேறு எங்காவது போயிடலம்ங்க என்று வேலப்பனிடம் சொன்னாள் சரசு. வேலப்பனும் சரி என்றான்.விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.

அனாதை கடவுள்கள் (குழந்தைகள்)
காமகர்களின் 
ஒத்திகை 
தெருவொர 
குப்பை மேட்டில் 
பூ 

குட்டி குட்டி தேவதைகள்
வண்ண வண்ண தேவதைகளின்
வரவிற்கு 
வானை அண்ணாந்து பார்ப்பதை விட 
அமைதியாக 
கண்ணை திறந்து பார்த்தால் 
அதில் தேவதைகள் அதிகம் 
குழந்தைகளாக 

குழந்தைகளின் எதிர்காலம் (கட்டுரை )
உலகம் குழந்தையாக இருக்கவே விரும்புகிறது.ஏதுமற்ற தன்மையில் ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை,வளர்ந்து கொண்டே போகின்றன.ஒரு குழந்தை தான் பெரியவனாக (இளைஞ்சனாக) மாற வேண்டும் என்று எண்ணுகிறது .ஆனால்,
பெரியவர்களோ (இளஞ்சனோ )குழந்தையாக வேண்டும் என்று விரும்புகிறான்.இது மனித மனதின் இயற்கை நிலை அப்படிதான்.குழந்தைகளை உற்று கவனித்தால் ஒழுங்காக ஒரு இடத்தில் நிற்க்காமால் கையை ஏதேனும் ஒரு உடல் உறுப்பின் மீது தடவி கொண்டே நோண்டி கொண்டோ இருப்பார்கள்.ஓன்று முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு முதலில் தன் உடலைத்தான் தெரியும் அது அன்பிற்கு ஏங்குகிறது.ப்ரைய்டு சொல்கிறார் ஒரு குழந்தை எந்த அளவில் தன் உடலை முழுமையாக தொட்டு புரிந்து கொள்கிறதோ அந்த குழந்தைகள் சில உணர்சிகளுக்கு அடிமையாவது மிக மிக குறைவு என்கிறார் .ஆனால் நாம் என்ன செயகிறோம் குழந்தை அதன் உடலை தொடும் பொழுதெல்லாம் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல் அவர்களை பயமுறுத்தி அதிகாரம் செய்ய வேண்டியது இப்படிதான் நாம் செய்கிறோம்.குழந்தைகள் உறுப்புகளை தொடும் பொழுது கருமாம் அப்படியென்று எப்பொழுதும் சொல்லி விடாதீர்கள் அப்படியென்றால் அப்படியே விட்டு விடலாமா?என்று கோப கனலை பெற்றோர்கள் என் மீது திருப்புவது எனக்கு புரிகிறது.குழந்தைகள் ஒரு சில உறுப்புகளை தொடுவது அழுக்கு கூட படிந்து இருக்கும்.அதனை புரிந்து கொள்ள வேண்டும்.அதனை நாம் பார்த்து சுத்தம் செய்து விட வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக வைத்து இருப்பது எப்படி என்று சொல்லி தர வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளை,குழந்தைகளாக இருக்க எப்பொழுதும் விடுவது இல்லை.இன்று விளையாட்டு என்றால் என்ன என்று கேட்க்கும் அளவுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.கார்ட்டூன், பீம் ,டோரா புஜ்ஜி என்ற கார்ட்டூன் டெலிவிசன் தொடர்கள்தான் அவர்கள் விளையாட்டு உலகம் எல்லாம் அதுதான் அவர்களுக்கு,ஓடியாடும் விளையாட்டு எல்லாம் மறக்கப்பட்டு விட்டன.அதற்க்கு காரணம் வெளியே போய் விளையாடினால் ஏதேனும் தொந்தரவுகளை குழந்தைகள் கொண்டு வரலாம்.என்றும் பெற்றவர்கள் நினைக்கலாம். அடுத்து ,படிப்பு எதிலும் அவர்களை அறிவாளி ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பு LKG லேயே ஆரம்பித்து விடுகின்றனர்.பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும 
எனக்கு தெரிந்த ஒருவரின் மகனை படிப்புதான் முக்கியம் என்று பயிற்றுவித்தர்கள்.அவனும் நன்றாக படித்து முதல் ரேங்கதான் வாங்குவான்.படிப்பை தவிர ஒன்றும் தெரியாது. அவனுக்கு அகில இந்திய பொறியல் தேர்வு நடந்தது. அவனும் எழுதினான்.ஆனால் தேர்வாகவில்லை பதட்டமதான் காரணம் இப்பொழுது அவன் மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறான்.
வாழ்க்கையில் படிப்பு மட்டும் எல்லாம் என்று பயிற்றுவிக்கபட்டவனின் நிலை இதுதான்.பெற்றோர்களின் ஈகோ எப்படியென்றால் தான் சொல்வதை கேட்கும் குழந்தைதான் நல்ல குழந்தை கேட்காத குழந்தை கெட்ட குழந்தை என்று தரம் பிரித்து விடுகிறார்கள்.
எனக்கு ஒரு நகைச்சுவை கதைதான் நியாபகம் வருகிறது.அறிமுகமில்லாத மனிதர்கள் இருவர் சந்தித்து கொண்டனர்.பேருந்து நிலையத்தில்,பேருந்து வர தாமதமாகும் சமயத்தில் இருவரும் பேசி கொண்டனர்.அப்பொழுது ஒருவர் தன் மகனை பற்றி புகார் வாசிக்க ஆரம்பித்தார்.
புகார் வாசிப்பவர்1:இப்பெல்லாம் என் பையன் சொல்லற பேச்சை கேட்கவே மாட்டங்கிறான்.என்ன செய்யறதுன்னு தெரியல உங்க பையன் எப்படி ?
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை 
புகார் வாசிப்பவர்1:என் பையன் இப்பொழுது பெண்கள் பின்னால் சுற்றுகிறான்.உங்க பையன்? 
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை பரவாஇல்லை 
புகார் வாசிப்பவர்1:அப்படியா ???என் பையன் சிகரெட் பிடிக்கிறான்.மது அருந்துகிறான்.ஊரில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டான் தறுதலை. ஆமாம்,உங்கள் பையன்?????
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை அவன் மிகவும் நல்லவன் 
புகார் வாசிப்பவர்1:அப்படியா ???ஆச்சரியம்தான் இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா எந்த காலேஜ் படிக்கிறான்?
புகார் வாசிப்பவர்2:காலேஜா அவன் கை குழந்தைங்க 
இப்படிதான் இருக்கிறது பெற்றவர்களின் கவனம் எப்பொழுதும் குறை சொல்லி கொண்டே இருப்பது
இதற்கு என்னதான் தீர்வு,ஒன்றும் செய்ய வேண்டாம்.பெற்றவர்கள் தங்களின் குழந்தைகளிடம் உங்களின் கனவுகளை அவர்களின் மண்டையில் ஏற்றதீ ர்கள்.அப்படி செய்யமால் இருந்தாலே குழந்தைகளுக்கு பாதி பாரம் குறைந்து விடும் அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் அவர்களை ஈடுபட விடுங்கள்.அதற்க்கு உதவுங்கள்.போதும் இதே.       கட்டுரையும்தான் 

நன்றிகள் 
அன்புடன் 
த.நந்தகோபால்

Sunday, 13 January 2013

பொங்கல் இனாம்பொங்கலுக்கு இனாம் நூறு அரசு அறிவுப்பு
அதை வாங்க ஆண்கள் கூட்டம் 
"ரேசனில் அரிசி வாங்கியா" என்ற மனைவியின்
 காட்டு கத்தலுக்கும் என்றுமே போகாதவன் 
நூறு ரூபாய் இனாமுக்கு போகிறான் 
அரசுக்கு வரி (டாஸ்மாக்)கட்டும் ஆர்வத்தில் 

Saturday, 12 January 2013

அன்பு உள்ளங்களுக்கு பொங்கல்வாழ்த்துக்கள்விடிய விடிய கதை பேசி 
காலை கதிரவன்  கரம் படும் முன்னே எழுந்து
 வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு 
நேற்று வாங்கிய பானையின் இரு புறமும் 
கரும்பு நிற்க வைத்து சுற்றி நின்று உறவினர்கள் சூழ
பொங்கி வரும் காவிரியை போல் பொங்கும் பொங்கலை
 உறசாகமாக பொங்கலோ பொங்கல் என்று  கூவி 
சூரிய கடவுளை வணங்கி ஆரம்பிகிறது 
பழையன கழித்து பக்குவமாய் 
தரணி முழுவதும் ஒலிக்கட்டும் 
தை மகளின் வருகை என்றுமே இருக்கட்டும் 
அடக்க முடியாத நம் ஆனந்தத்தை போல்!!!!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 
அன்புடன் 
த.நந்தகோபால் 

Tuesday, 8 January 2013

உனக்கு வரும் வெட்கம் எனக்கும் வருகிறதுஒன்றை பார்வையில் 
ஓராயிரம் கனவுகளை விதைத்தவளே 
குறும்பான வார்த்தைகளை சொல்லி விட்டு
 குதூகலமாய் நீ சிரிக்கையிலே
 மலரும் மொட்டுகளை பார்கிறேன் 
உன் செவிதழில் 
கடவுளுக்கும் தெரியாது 
உன்கண்ணின் ஆயிரம் அர்த்தங்கள்
நீ மறைக்கும் சோகம் எல்லாம் 
 மையாகும் உண்மைகள் 
கண்ணீர் துளி பட்டு தெறிக்கும் நிலத்தில் 
ஏதுமற்ற எனக்கு  எல்லாமும் நீயே 
உனக்கு வரும் வெட்கம் எனக்கும் வருகிறது 
 சொன்னது ஓன்று செய்வது ஓன்று என்று நண்பர்களின் திட்டுதலில் 

Saturday, 5 January 2013

தனிமையும் வெறுமையான மைதுளியும் :


மீதம் எல்லாம் மீதியாகி நினைவுகளற்ற 
இலையுதிர் காலத்தின் வெறுமையை 
மொட்டை மரங்கள் சொல்கிறது
அதன் கொடுமையை, 
ஊமையான உலகம் 
பயங்கரமான வெற்று இடத்தில
 ரசித்தபடியே 
 படுக்கை மீது இருக்கும்
 காயம்பட்ட உருவத்தின் நிழல்  மட்டும்தான் 
இனிக்க இனிக்க இழைக்கப்பட்டபொய்
பாறை போல் கண கணக்கிறது 
சிறகுகள் ஒடிக்கப்பட்டு 
 பருவத்தின் பலன் 
யோசித்தலில் 
ஒளியும் நட்ச்சத்திரம் 
வட்டம் இடும் விட்டில் பூச்சி 
சந்தித்தை போன்று 
மரணித்து போகிறது 
மைத்துளி....... 

Friday, 4 January 2013

மௌனம்இருந்திருந்தால் என்ற வார்த்தையில்தானே
 ஆதங்கத்தின் மௌனம் 
வெப்பமான மூச்சுஆக  
பயணிக்கிறது 
வார்த்தை பரிமாற்றங்களிடையே வந்து போகும்
 சிறு நெருப்புதானே வாழ்வின் கருப்பு துளி 
மொழிகளற்ற உலகை 
நினைத்து பார்கிறேன் 
இன்னும் அழகாக இருந்து இருக்கும் 
மௌனம் 

ஸ்பரிசத்தின் ஆரம்பமும் முடிவும்
வன்முறையில் சிக்கி தவிக்கிறது
ஒன்றை மின் விளக்கு 
ஸ்பரிசங்களற்ற தவிப்பில் தகிக்கிறது
 நெருப்பு 
அமைதியற்ற அந்தரங்கத்தின் 
இடைவெளி 
பெருக பெருக படுக்கை விரிப்பில
 ஒரு துளி கண்ணீர் 
சில சப்தங்களுடன் மணி கணக்கில் பேசிய பேச்சும்
 நீண்டு கொண்டே போன
நெளிதலும் முனகலும் 
முடிந்தது
ஒரு சில ஸ்பரிசத்தில் (உறவில் )

Thursday, 3 January 2013

அம்மா


அம்மாவின் கை பிடித்து 
நடைக்கையிலே 
ஆனந்தம்தான் 
திருவிழா கூ ட்டங்களில் நடுவே 
நச்சரித்து வாங்கிய மிட்டாய்களும் ,
ஒரு ருபாய் ஐஸ்கிரீம் 
அடி கொடுத்து கூட்டி போன பள்ளிக் கூடமும் 
எந்த வித இலக்கும் இல்லாத 
இறக்கையற்ற மனம் 
ஆனந்தமாக 
மழையில் நனைந்து 
ஆடிய ஆட்டத்தில் 
ஜலதோஷம் பிடித்து 
மருந்து சாப்பிடுகையில் 
கண்ணில் விழுந்த தூசு போன்று 
கலங்கியது அம்மாவின் கண்ணில் 
ஆனாலும் 
இப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன் 
மருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்

கனவோடு வந்து போகின்றன எல்லாம் (படுக்கை விரிப்பில் ஒரு பாம்பு )நீண்ட இரவெல்லாம்
விடிவதே தெரியமால்,
 என் நினைவுகளில் புகுந்து கொள்ளகிறது. 
நீ சொன்ன வார்த்தைகள் 
எங்கும் எதிரொலித்து கொண்டு 
கனவோடு வந்து போகின்றன 
நாம் இருவரும் சேர்ந்து போன இடங்கள்
திடுக்கென எழுகிறேன்.
மின் விசிறியின் துணையால் 
ஆடிக்கொண்டு இருக்கிறது.
 மேசையில் இருக்கும்,
 ஒரு வெற்று காகிதம் 
என்னை போலவே