TV

Wednesday, 20 November 2013

தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ...
கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்..
எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும்
நீண்டு கொண்டிருக்கும்
பதில்கள் எப்போதும்...

இருட்டு வேளையில்வானம்
பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய்.
யாவரின் தேடல் சுவாசமில்லா
பனியின் திராட்டம்!

தலையசைப்புகாய் காத்திருப்பும்
சலனப்பட்டு எழுந்துவிட
நிசப்தமான தூக்கம் இல்லா
பின்னலிடப்படும் பாதச் சுவடுகள்
உணர்வுப் பிழம்புகளை எல்லாமே
பொய்யாகிவிட்ட போர்க்களம்
அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது?

தேய்தலுக்கு உட்படவும் இல்லை
உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும்
எத்தனையோ சமாதானங்களை சொன்ன
மூகமுடி வக்கிரங்கள்.
எல்லார் முகத்திலும் இறப்பு
இழுத்து, மூடப்பட்ட போர்வைகள்
.மனிதர்களைத் தேடியே
தொலைந்த தருணங்களில்
எப்பொழுது நிகழும் தியானம்...

அபிப்பிராயமின்றி இயல்பிற்கு
எதிராய் தனிமையின் நீளம்
இருள் சூழ்ந்த அதே குரூரம்
வறண்டு பாலையென
அமிலத்துளிகளில் தீர்ந்த சொற்கள்
தொலைந்து விட்ட இடத்தில் பதிந்திருக்கக்கூடும்.
ஏதேனும் பகுதியொன்றில் பிம்பமாய்

Tuesday, 17 September 2013

உடைபடா உலகம்

என்றுமே எண்ணியதில்லை
இறுக்கி இருக்கும் கயிற்றினை
வர்ணம் பூசி நாகரிக மனிதர்களாய்
மீண்டும் வெளுத்த அம்மணத்திற்காய்
நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று
சுமந்தலைந்த காயங்களுடன்
வாழ்வின் வறட்சியாக
நிராதரவான உணர்வும்
மரங்களின் மௌனமும்
இரண்டும் அங்கேதானிருந்தது
ஒன்றின் மேல் ஒன்றாக
காற்று வரைந்து விட்டு போன
ஓவியமான நெளி அலைகள்
நிரம்பிய நிழல் நிதானமிழந்து
கசந்து வெளியேறும்
அர்த்தங்களின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்.
கதவுகளை மூடிவிட்டு முனகும்
தவறிய அழைப்புகள்
கட்டப்பட்ட கடிவாளங்கள்
உடைபடாத ஒருஅந்தி பொழுது
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
சாயும் இளமஞ்சள் நீர்க்குமிழில் உடைந்தபடி
பிணங்களின் மீதேறியே மீதமாகும் மீதம்

Saturday, 6 July 2013

நச்சதிரமாய் மின்னும் பொன்னேமொட்டை மாடி விட்டத்தில் 
உன்னை நினைக்கும் 
ஒவொரு தருணமும் 
நச்சதிரமாய் மின்னுகிறதோ
 வானில் 
வேண்டுமானால் இன்றைய இரவில் 
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை 

நினைத்து இருப்பேன் என்று????

Tuesday, 11 June 2013

தீராத தீவிரவாதம்ஏதேனும்  பாதுகாப்பை நிச்சயித்து கொள்ளும்
கண்களில் எல்லாம் அர்த்தங்கள் அடுக்கபடுகின்றன 
சிலது சில மாதிரி என்று 
சொல்லுவதற்கும் செய்வதற்கும் ஏதேனும் 
வேண்டுமென்றுதான் ஆரம்பிக்கிறது 
ஆளை கொல்லும்  ஆட்டம் 
இரும்பு கம்பிகளாக ஆகி போகின்றன பகைமை  
அணுகுண்டு அணுக்களில் அடுக்கபடுகின்றன 
வெடித்து சிதறும் சடலங்கள்  
உறைந்து கிடக்கும் குருதியில்
இறைந்து கிடக்கும் ஈக்கள்தான் 
எப்பொழுதும் (தணியும் )தீவிரவாதம்??? 

Saturday, 8 June 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு இரு விழி கனிகள் வீரிய நாதத்துடன் எழும், விடியலில் 
நெற்றி பொட்டில் நிலத்தின் சுருக்கங்கள்
பூமியெங்கும் புழுதிகள்
 வறண்ட பூமியின் ஓரத்தில் பாறை மண் மூடி கிடக்க 
 நடுவே நீளும் ஒரு வழி பாதையில் ஈந்து போன கோமணத்தில்
பாதி கால் ஊன்றி பயிர் இட்டு, உழவென்னும் 
பெயர் சொல்லி இரத்தம் பிழியும் இரசவாத்தில்
தகிக்கும்  வெயிலில் திகைக்கும்   வியர்வை துளிகள்
அதன் மேல் கருகி போன பயிர்கள்  
வந்தாலும் வருவேன் என்றொரு உறுதிபடா
உறுதி மொழியுடன் உலகில் பிரவெசிக்க் தயங்கும் மழை துளிகள் 
காய தொடங்கி  காலம் முதல்  காய்ந்து போன
 வயிற்றுடன், விட்டத்தை பார்த்த பருக்கைகள் 
 எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம் நாளைய வரலாறு
 பட்டினி சாவுடன்?????? 

Tuesday, 4 June 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
இரவு முழுவதும் களைத்து துறங்கும்
சந்தோஷமான நாள் ஒன்றின் விடியலில்
வெள்ளை சட்டையும் அதன் ஓரம்
மங்களகரமான மஞ்சளும் இன்னும்
சந்தோசம் வேண்டுமென்று கிளம்பியது
சுய நினைவின்றி  அரசாங்கத்திற்கு வரி கட்டும்
ஆசையில் நண்பர்களுடன் 
 வட்ட மேஜை மாநாட்டில்,
 அங்கு ,எங்கும் இசைக்கபடுகிறது.
காதல் கீதங்களும்  சோககீதங்களும் 
போதையாற்றின் நிழலில்  கரை ஒதுங்கி  
மீண்டும்  திரும்பி விடுகின்றன
நாற்றமெடுத்த சாக்கடைகளுடன் 
குறைவின்றி குடித்தலில் குளிக்கிறது இறப்பு
 தன் ஆனந்தத்தை

Tuesday, 7 May 2013

வன்முறையாகின்ற வரம்


பற்றியெரிந்தது தனிமையின்  தவிப்பு 
வெளிறிக் கிடக்கிறது  வெள்ளை மனம் 
கனத்த மௌனத்துடன்
நிலைநிறுத்திப் போகிற நினைவுகள் 
பூர்த்திசெய்கிற புலம்பல்களும் 
சுற்றத்தில் மனிதரும் இல்லை..
உறக்கம் தொலைத்த விழிகள்
வெகு தந்திரமாகத் திணிக்கிறது
எதையோ  நினைத்து அதன் வலிகளில்
வாழ்வின் வழியை சுருக்கி 
பிளவுபட்ட மர  கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம் 
வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு

Thursday, 11 April 2013

எதிர் பார்க்கும் தருணம்


சில நேரங்களில் 
நினைக்க தோன்றுகிறது
 தற்கொலை பற்றி 
ஒரு அதிகம் பாரம் ஏற்றிய 
வாகனத்தை போல 
தடுமாறி கொண்டே போகும் 
என் நிலையை பார்த்து 
வறண்டு விட்ட ஆற்று நீரை போல் 
வறண்டு இருக்கு கண்ணீர் 
மழையை எதிர் பார்க்கும் 
ஒரு விவசாயி போல
 நானும் எதிர் பார்க்கிறேன் 
கண்ணீரை 
அதிலாவது என் பாரம் குறையுமென்று 

Monday, 25 March 2013

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )வயதுக்கு வந்த நாள் முதல்
தொல்லையின் தொடக்கம்
எங்கும் பார்க்கப்படும்  பார்வையில்
எல்லாம்,என் இதயத்தை        
அவர்களின் கண்களுக்கு காட்டமாலே 
விளையாடுகிறது.இளமை எனும் சதை துண்டு
எங்கோ இருந்து வந்தவன் எழுதிய
வெற்று காதல்  காகிதம்,அதை படித்தவர்கள்
பிறப்பின் தொடக்கத்தில் தேவதை மஹாலட்சுமி  என்று
 கொஞ்சிய உதடுகள்  (பெற்றவர்கள் )கூட
"குடும்ப மானத்தை வாங்காதே எங்கயாவது
கண் காணாத  இடத்துக்கு போயிடு"இன்னும் இன்னும்
உள்  நாக்கின் நீளம்தான் ஒரு சாட்டையாய்
 அனலாக வீசப்பபட்டு அடித்து கொண்டு வரும்  வார்த்தைகள்
வெறுமைக்கு தள்ளுகிறது என்னை    :hmmm:    
 
கூட்டத்தின் நடுவே குழப்பம்தான்
கும்மிருட்டில் மாட்டி கொண்டு அழும்         குழந்தையாய் போல
சுற்றி உள்ளவர்களின்முகமூடியால்,
நல்லவர்களும் கெட்டவர்களும்,ஒரே மாதிரி
குழந்தையாய் கொஞ்சிய அக்கம் பக்கத்தவர்கள்   கூட
 பருவ கால செழிப்பை      :O    நெருஞ்சி முள்ளை போல் குத்துகின்ற
 அவர்கள் பார்வையின் வக்கீரம் 
என் உடலின் சதை  துண்டுக்கு, 
 
இன்னும் வாழ்வு இருக்கு என்று எண்ணி
திருமண வாழ்க்கையில்  வருபவனாவது என்னை
புரிந்து கொள்வன்என்று,
ஏங்கிய காலங்கள் எல்லாம் ஏமாற்றி 
நகைகளையும் என் புன்னகையும் ஒன்றாக சேர்த்து
 அடமானம் வைத்து விட்டாவானாகி விட்டான் என்னவன்.
அடிக்கடி வேட்டையாடபடும் மிருகத்தை போல
 வேட்டையாடபடுகின்றன என் சதை துண்டுகள்
 எதையும் காதில் வாங்க வல்லவன் என்னவன்
தூக்கி எறியப்பட்ட கனவுகளுடனும் 
கசக்கி பிழியும் கரும்பு சாறை போலவும் 
 கண்ணீரின்     :cry2:     இரவுகள் அவனுடன்
பூத்த நிறம் மாறும் கீழே விழும் பூக்களுக்கு 
மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு??????

Wednesday, 27 February 2013

தூங்க வைக்க போகும் இரவு


 நண்பா!!!நமக்குள் வைத்த போட்டியின்  விதிமுறையில் 
நாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம் 
இரவில் மாறுதலுக்காக 
வேலை செய்வோம் என்று உறுதி பூண்டு 
தொடங்கினோம்  வேலையை 
அதை கேட்ட இரவு
சிரித்து கொண்டே சொன்னது 
உங்களை ஒரேடியாக 
துங்க வைக்க இது போதுமென்று

Friday, 22 February 2013

தெரிந்து கொள்வோம் பொது அறிவியல்பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து 
---------------------------------------------------------------------------------
ஸ்பெயின் நாட்டின் தேசிய மிருகம் கழுதை 
-------------------------------------------------------------------------------
மூளையின் முகுளப்பகுதி மனிதனின் சுவாசப்பகுதியை கட்டுப்படுத்துகிறது.
------------------------------------------------
இந்தியாவில் பேருந்து போக்குவரத்தையும் வானொலி ஒலிபரப்பையும் 
தொடங்கிய முதல் மாநகராட்சி---சென்னை  
----------------------------------------------------------------------------------- 
இந்தியாவின் மிகப்பெரிய நூல் நிலையம் இருக்கும் இடம் கொல்கத்தா.32லட்சம் புத்தகம் இருப்பு கொண்டது  ---
-------------------------------------------------------------------------------------------
மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரியை கண்டுபிடித்தவர் 
வோல்டாஸ் .இவரது பெயரில்தான் மின்சக்தியை வோல்ட் என்று அளவிடப்படுகிறது.
-----------------------------------------------------
தீ பெட்டியின் உரசும் பகுதியில் உள்ள வேதியியல் மருந்தின் பெயர்-----சிவப்பு பாஸ்பரஸ் 
-----------------------------------------------------------------------------------------
ஒரு மின்னலில் 250 கோடி வால்ட் மின்சக்தி உள்ளது.
--------------------------------------------------------
தமிழ்நாட்டில் மாக்னசைட் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாவட்டம் ------சேலம் 
------------------------------------------------------------------------------------------------
வெள்ளி விழா என்பது இருபத்தைந்தாவது ஆண்டு விழா 
பொன் விழா என்பது ஐம்பதாவது ஆண்டு விழா 
வைர விழா என்பது அறுபதாவது ஆண்டு விழா 
பிளாட்டினம் என்பது எழுபத்தைந்து  ஆண்டு விழா 
-------------------------------------------------------------------------------------
நீண்ட நேரம் t.v பார்ப்பதால் ஹைப்போடைனமாயா என்ற மந்த போக்கு நோய் ஏற்படுகிறது 
-----------------------------------------------------------------------------------
0 வாட்ஸ் என்பது உண்மையில் 15 வாட்ஸ் கொண்டது 
----------------------------------------------------------------------------------------
கார் பேட்டரியில் உள்ள அமிலம் கந்தக அமிலம் 
---------------------------------------------------------------------------------------
மனிதன் தன் வாழ்நாளில் 60ஆயிரம் லிட்டர்கள் நீர் அருந்துவான் மேலும் சாப்பிடும் உணவு முப்பதாயிரம் கிலோ இருக்கும்.
-----------------------------------------------------------
உலகில் தினமும் சராசரியாய் ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஓர் ஆய்வு  
-----------------------------------------------------------------------------------------------------