TV

Wednesday, 28 November 2012

சிரிப்பு கனவு

எதோ ஒரு விலங்கின் துரத்தலில் மூச்சிரைக்க ஓடி  வந்தேன் 
 நடு வழியில்
ஒரு எலி நிறுத்தி ஆசுவசபடுத்தி ஏன் என்றது.
 விலங்கு துரத்துகிறது என்று சொல்லி கொண்டுருந்த வேளையில்,
 வந்தது பூனை
அதை பார்த்து எலி பயந்து ஓடியது நானும் 
திடிரென விழித்தேன் "இச்சே ஒரு பூனைக்கு பயந்து விட்டேனே" என்று திரும்பி படுத்தேன் 
அகப்படவே இல்லை அந்த பூனையும் எலியும்     Smile        Smile    

நினைவுகளில் சில


நினைவுகளில் சில
உலகம் மறந்து போகின்ற தருணம்
 நீ பதித்த  பார்வை
எல்லா திசைகளிலும்
ஒளியூட்டி கொண்டு இருக்கும்
 பௌர்ணமி நிலாவை போல்
 நினைவுகள் எல்லாம் ஒளி பெறுகிறது
நீ சிரித்த அழகான சிரிப்பில்
 நாட்கள் கூட  நகர்ந்து விட்டது 
ஒரு அதி வேக ரயிலை போல
இறுதியில்
எல்லாம் கற்பனையாக முடிந்து விடுகிறது
 இந்த கவிதையை போல
ஒரு சில கணங்களில் 

Tuesday, 27 November 2012

நிதர்சனம்


நிதர்சனம்
கல் கொட்டிய
சாலையோர நிழலில் 
வானத்தை நோக்கி
வீசிய ஒன்றை பார்வையில்
தனக்குதானே வெற்று உரையாற்றி விட்டு
 பார்த்தது வெறுமை 
யாரோ ஒருவர் தூக்கி எறிந்து 
சடலமாக்கபட்டஒன்றை ரூபாயும் 
அதில்  படிந்து இருந்த பசையில் 
சில ஈக்களையும் 

Sunday, 25 November 2012

மிச்சமும் எச்சமும்மிச்சமும் எச்சமும்
காமத்தின் எச்சமும்
 காவலுக்கு இருந்த
மின்மினி பூச்சியும் பறந்தது
 ஒரு இரவில்
வெள்ளை படுக்கையில்
சருகு ஆகி போன மல்லிகையின் சரங்கள் 
சிதிலடைந்த  சிகரெட் துண்டின்
அடைக்கப்பட்ட நிகோடின் சாம்பலும்
காய்ந்து போன கறை உதட்டு சாயமும்
வன்முறையில் தெளிக்கப்பட்ட
உயிரின் துளியும் 
ஏதோ ஒரு நிலையில்
உடைப்பட்ட மது பாட்டிலிருந்து
கடைசி துளி வெளியேறியது 

Saturday, 24 November 2012

குதூகலம்


குதூகலம்
உரசி விட்டு போன தென்றல்
 விட்டு விட்டு போனது மழையை 
குழந்தைகளின் குதூகலத்தை 
பார்ப்பதற்காக         
 
(இந்த கவிதை குமுதம் இதழுக்கு எழுதியது 

Friday, 23 November 2012

வெற்று பார்வையில்


வெற்று பார்வையில்
எதையோ விட்டு செல்லும்
 வெற்று பார்வையில்
விழிகளில் விதைத்து இருந்த
 ஆணவம்
விண்ணை நோக்கி சிதறியது
மேகங்கள்
கும்மிருட்டில் உற்று பார்த்து கொண்டு
 இருக்கையில்
மெதுவாக வந்து கொத்தும் மரங்கொத்திகள்
சட்டென்று பற்றி கொள்கிறது சாம்பல் நிற சூரியன்
கண் மூடி மறக்கும் மெல்ல மெல்ல
சரிய தொடங்கும் மாலை வேளை
வெற்றுடம்புடன் செல்லும் மாருதிகள் (குரங்குகள் )
வாசகர்களாக வந்து செல்கிறது
 வசிப்பிடங்களை தேடி       

அன்பின் பரிமாற்றம்


அன்பின் பரிமாற்றம்          
புலர் பொழுதில்
 தானியங்களை சுற்றி
 சிறகடிக்கும் சிட்டு குருவி 
துவங்குகின்றன
 லேசான வெப்பத்தின் 
வழியே அனுப்புகிறது 
தன் ஈரமான காதலை 

Sunday, 18 November 2012

ஒரு உயிர் ?????????????/
நெடு தூர பேருந்து பயணகளில் 
எல்லாம்
பார்க்கிறேன்
 வழிதடம் தெரியமால் 
மாட்டி கொண்டு  
நசுங்கிய நாய்களின் 
இறைச்சி துண்டுகளின் மீது 
 மொய்க்கும் ஈக்களையும் 
மனிதத்தின் இரக்கம ற்ற மனங்களையும்    Shock    

அம்மாவின் அன்பு


அம்மாவின் அன்பு     
தீபாவளி  பண்டிகையில்
 வேண்ட வெறுப்பாய்
பார்க்க போன இடத்தில (முதியோர் இல்லம் )
கிடைத்தது
தன் மகனுக்காக
பூ வேலை பாடு செய்த புதிய சட்டை
அம்மாவின் கையில்     heart   

Friday, 16 November 2012

ஒரு மாற்று திறனாளியும் அவருடைய வியாபாரமும்


சென்ற வாரம் சமயபுரம் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது.
சாமி தரிசனம் முடிந்து வரும் பொழுது கோவிலின் நூழை வாயிலில் 
சாமி படங்களை விற்று கொண்டு இருந்தார் ஒரு மாற்று திறனாளி 
சாமி படங்களை வாங்க எனக்கு விருப்பம் இல்லை 
ஏனென்றால் ஏற்கனவே போதுமான சாமி படம் வீ ட்டில் இருக்கு.
எனக்கு அவரை பார்த்தவுடன் இரக்க உணர்வு பற்றி கொண்டு வந்தது.
அவருக்கு எதாவது உதவ வேண்டும் என்று எண்ணி சட்டையில் இருந்து 
ஒரு பத்து ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்து வைத்து கொள்ள என்றேன். 
ஆனாலும் அவர் "சார் சாமி படம் இருபது ரூபா சார்"என்று கூறி 
சாமி படத்தை குடுத்து மீதி பத்து ரூபாயை வாங்கி கொண்டார்  
அந்த மானமுள்ள வியாபாரி 

சூதாட்டம்


சூதாட்டம்           
சூதாட்டத்தில் தருமன் என்று 
 மார்தட்டி கொண்டு 
சூடாக தொடங்கிய ஆட்டம் 
சுதி இறங்கி,
ஆட்டம் கண்டு போனது 
சட்டை பையில் இருந்த 
மனைவியின் நகை,
 அடகு கடை ரசீது 

Friday, 9 November 2012

பெண்களின் உணவு பழக்கம்


தனிமையில் தவித்த அவனுக்கு
திருமணம்
மனைவியுடன் பனி  பிரதேசத்தில்
 பணி

பயணம் 
வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்த ஏகாந்தம்
 சில வருடங்களின் மகரந்தம் ,
சிசுக்களின் வரவு
உணவு வகைகளின் மாறுபாடு
உள்ளங்களின் ஏக்கத்தோடு
உடல்கள் தாங்க வில்லை
 எடை அதிகரிப்பு
நாற்ப்பதுகளின் நாதமும் மீதமும் முடிந்தது
 அவனை விட்டு 
அவள் ?

தண்ணீரும் மனிதமும்


காலையின் காற்றை  கிழித்து  கொண்டு 
அதிர்வின் ஒளி கதறியது 
அதிக பாரம் ஏற்றிய வண்டியின் நிறுத்தும் சத்தம்
ஒரு  மிருகத்தின்  குரலை போல 
அதனருகே 
ரத்த வெள்ளத்தில்   ஒரு உடல் துடித்து கொண்டு இருந்தது 
அதை பார்த்து கூட தொடங்கிய கூட்டம் 
வன்முறையில்     Angry    
வாகனமும் ஒட்டியையும் அடித்து நொறுக்கினர்.
எங்கிருந்தோ ஒரு குரல் 
தண்ணீர் வருது தண்ணீர் வருது 
கூடியிருந்த கூட்டமெல்லாம் 
சிறிது  சிறிதாக குறைய தொடங்கியது 
இன்னமும் உடல் மட்டும் துடித்து  கொண்டு     Shock    
 
மன எடைதராசில் ஒரு பக்கம் மனிதத்தையும் 
இன்னொரு  பக்கம் தண்ணீரையும் வைத்தால் 
அதில் மனிதம் தோற்று  விடும்தானே    Hmmmm        Hmmmm

நவீனம்


யதோச்சையின்  யாசகம் அந்த மாலை வேளை 
 அரை வண்ண விளக்குகளில் 
அலங்கரிக்கப்பட்ட தேநீர் விடுதி 
வாயில் ஒரு  குவளை தேநீர் 
றிஞ்ச்யபடியே 
சற்று  நிதானித்து  திரும்புகையில் 
நவீன மங்கையின் 
மிக இறுக்கமான ஆடைகளில் அங்கங்கள் 
"தைரியமிருந்தால் என்னை தொட்டு பார்"
 மார்பகத்தின்  மீது அச்சடிக்கப்பட்ட வாசகம் 
பிரகாசமானது எல்லோரின் (ஆண் )கண்களும் 
இருண்டது 
அச்சம் நாணம்  பயிர்ப்பு இன்னும் சில??????

Saturday, 3 November 2012

கண்ணீரில் காதல்


கண்ணீரில் என்  காதல்     


தனிமையில்  இருக்க
பயம் ஓன்று இல்லை 

எனக்கு
 உன் நினைவுகள்
இரு(ற)க்கும் வரை
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
 பதித்த முத்தத்தின் கதகதபையும்
 எண்ணி கொண்டே
 இரு(ற)க்கிறேன் 

வந்து போகின்ற நினைவலைகளில்
 அன்றொரு நாள் சொன்ன பொய்யான 
  வார்த்தைதான் கனக்கிறது மனதை 
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று 
அலைகள் அடித்து விட்டு போகும் 
அந்த  பாதையில்
 நாம் நனைத்த பாதங்களையும் 
 நடந்த காலடி சுவடுகளையும்  
 தேடி கொண்டு இருக்கிறேன் 
நம் காதலை போல 

மீண்டும் ஒரு மழை காலம்


மீண்டும் ஒரு  மழை காலம்
அனலை
தன்னுள் இழுத்து கொண்டது
 சூரியன்                             
அந்தி நேர வரவேற்ப்புக்கு,
திடிரென
 சாவு    ஊர்வலத்தின் சர வெடியாய்
மேகங்களின்  சத்தம்
சிறிது  நேரம்  
காற்றின்   பஞ்சாயத்தில்
 மழை தூளி   
உணவு கிடைத்த சந்தோஷத்தில்
 மண் 
நனையாத இடம் தேடின
மனித உடல்கள்
 நனைந்ததை மறைத்து  கொண்டு 
தன் இருப்பிடத்தில் இருந்து
எட்டி பார்த்து சிரித்தது
 தவளை
 மழைக்கு பயந்து ஓடும் மனிதனை பார்த்து

சேற்றை வாரி இறைத்த வாகனம்
அறிவித்தது தன் வேகத்தை     

வேலை கெட்டு விட்டதென்று
கவலையுடன் சிலர்
  ஆனாலும் சந்தோஷத்தில்,
 கப்பல் செய்ய கற்றுத்தருகின்றன.
குழந்தைகள் 

சில நாழிகைகள்
தன் கவலையெல்லாம்
 கொட்டி  தீர்த்து விட்டு
வெள்ளை ஆடை அணிந்தது
 மேகம்   

நிஜ நட்பே நீ எங்கே????

நிஜ நட்பே நீ எங்கே????


கடைசியில் நகர்த்தும்
சதுரங்க விளையாட்டை  போல்
 நகர்ந்து கொண்டு இருக்கு
பரிதவிக்கின்ற
 மௌனம்,
பசை போல்
 ஒட்டி கொள்கிற
தருணம் அது 
அற்ப சந்தோஷத்தில்
 ஆடும்
விட்டில் பூச்சியாய்
ஒரு பெண்ணுக்காக
 நீ, 
என்றோ
பேசிய
உன் பேச்சு.
 இன்னும்,
என் மனதை
கிழித்து கொண்டு
 ரணங்கள்
ஆறாமல்
 பரிதவிகின்றன.
உதவிகள்,
சொல்லி காட்டுவது
அழகல்ல என்று
நான் நினைக்கையில்.
நீயே,
சொல்லி கொண்டு
இருக்கிறாய்.
எனக்குள்,
 இருக்கும் மனிதத்தை,
இன்னும் இருக்கிறது
என்னுள்
உன் நட்பின் கீதம்.
எப்பொழுது வருவாய்?
 என்னிடம்
நிஜ நட்போடு.............    heart    

விஞ்ஞான வளர்ச்சி


விஞ்ஞான வளர்ச்சி


கனி,
சாப்பிட
குழந்தைகளுக்கு
நேரமில்லை 
கணினி
சாப்பிட்டு கொண்டு இருக்குகிறது 
அவர்களின் நேரத்தை 
இணணயத்தில்
இணைந்து இருக்கு
இல்லம்
அவரவர்
அவர்களுக்குரிய அறையில் 

புண்ணியாத்மாக்கள்

புண்ணியாத்மாக்கள்


 விடுதலை போராட்டத்திற்கு,
 போராடிய தியாகிகள்,
 எல்லாம்,
 இன்னமும்
 போரட
 வேண்டி இருக்கிறது.
அரசின்
 உதவி தொகையை
 பெறுவதற்கு     Cry    

பசி

பசி

வெளியுரின் புதுமையில்
 தொலைந்தது
 கையிலிருந்த காசு
 பூ கூட,
 வீழ்த்தி  விடும் 
பலவீனம்  
சாலையோர பாதையில்
 நடக்கையில்,
வயிற்றின் சூட்டில் வலி 
ஒரு வாய் சோற்றுக்கு 
அலைகின்ற
ஒரு  நாயை  போல 
பழக்கமற்ற மனிதர்களை
பார்த்து
 பரிதவிகிறது 
 வெட்கமற்ற  வயிறு 
 
கண்கள்
கண்ணாமுச்சி
ஆடி கொண்டு இருக்கிறது 
 உடலை 
சாந்தி அடைய
செய்யலாமென்று
தெருவின் ஓரத்தில்  இருந்த குழாயை
திறந்தால்
தண்ணீர் சொட்டுகிறது.
ஒரு துளி பட்டவுடன்
நாக்கு
 தண்ணீர் சொட்டுகிறது
இன்னொரு துளி தண்ணீருக்கு 
 
தனி மனிதனுக்கு
உணவு இல்லையெனில் 
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி 
ஜகத்தினை அழிக்க வேண்டாம் 
மனிதமற்ற  ஜந்துகளை அழியுங்கள்  என்று
மனதின் அலைகள் ஓடி கொண்டு இருக்க 
   
   
அதி வேக
காற்றடித்து விட்டு  
சிறிது
 பெய்ய துவங்கியது
  வானம்
அதன் கண்ணீரை ..........