TV

Wednesday 27 February 2013

தூங்க வைக்க போகும் இரவு


 நண்பா!!!நமக்குள் வைத்த போட்டியின்  விதிமுறையில் 
நாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம் 
இரவில் மாறுதலுக்காக 
வேலை செய்வோம் என்று உறுதி பூண்டு 
தொடங்கினோம்  வேலையை 
அதை கேட்ட இரவு
சிரித்து கொண்டே சொன்னது 
உங்களை ஒரேடியாக 
துங்க வைக்க இது போதுமென்று

Friday 22 February 2013

தெரிந்து கொள்வோம் பொது அறிவியல்



பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து 
---------------------------------------------------------------------------------
ஸ்பெயின் நாட்டின் தேசிய மிருகம் கழுதை 
-------------------------------------------------------------------------------
மூளையின் முகுளப்பகுதி மனிதனின் சுவாசப்பகுதியை கட்டுப்படுத்துகிறது.
------------------------------------------------
இந்தியாவில் பேருந்து போக்குவரத்தையும் வானொலி ஒலிபரப்பையும் 
தொடங்கிய முதல் மாநகராட்சி---சென்னை  
----------------------------------------------------------------------------------- 
இந்தியாவின் மிகப்பெரிய நூல் நிலையம் இருக்கும் இடம் கொல்கத்தா.32லட்சம் புத்தகம் இருப்பு கொண்டது  ---
-------------------------------------------------------------------------------------------
மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரியை கண்டுபிடித்தவர் 
வோல்டாஸ் .இவரது பெயரில்தான் மின்சக்தியை வோல்ட் என்று அளவிடப்படுகிறது.
-----------------------------------------------------
தீ பெட்டியின் உரசும் பகுதியில் உள்ள வேதியியல் மருந்தின் பெயர்-----சிவப்பு பாஸ்பரஸ் 
-----------------------------------------------------------------------------------------
ஒரு மின்னலில் 250 கோடி வால்ட் மின்சக்தி உள்ளது.
--------------------------------------------------------
தமிழ்நாட்டில் மாக்னசைட் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாவட்டம் ------சேலம் 
------------------------------------------------------------------------------------------------
வெள்ளி விழா என்பது இருபத்தைந்தாவது ஆண்டு விழா 
பொன் விழா என்பது ஐம்பதாவது ஆண்டு விழா 
வைர விழா என்பது அறுபதாவது ஆண்டு விழா 
பிளாட்டினம் என்பது எழுபத்தைந்து  ஆண்டு விழா 
-------------------------------------------------------------------------------------
நீண்ட நேரம் t.v பார்ப்பதால் ஹைப்போடைனமாயா என்ற மந்த போக்கு நோய் ஏற்படுகிறது 
-----------------------------------------------------------------------------------
0 வாட்ஸ் என்பது உண்மையில் 15 வாட்ஸ் கொண்டது 
----------------------------------------------------------------------------------------
கார் பேட்டரியில் உள்ள அமிலம் கந்தக அமிலம் 
---------------------------------------------------------------------------------------
மனிதன் தன் வாழ்நாளில் 60ஆயிரம் லிட்டர்கள் நீர் அருந்துவான் மேலும் சாப்பிடும் உணவு முப்பதாயிரம் கிலோ இருக்கும்.
-----------------------------------------------------------
உலகில் தினமும் சராசரியாய் ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஓர் ஆய்வு  
-----------------------------------------------------------------------------------------------------

Tuesday 12 February 2013

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்


வணக்கம் நண்பர்களே  
                          காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீ ச்சு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 திடுக் திடுக்  என்று பதட்டம் அடைந்து விட்டது என் மனம் இன்று இந்த செய்தியை படித்து விட்டு,
ஒரு தலை காதலால்  ஒரு சில மனித மனம் முற்றிலும் சுயறிவற்ற விலங்கினமாக மாறி  வருகிறது  என்பதற்கு இது ஒரு  உதாரணம் 
இளைஞ்சர்களை  பையித்தியமாக ஆக்கி விட்டது.
 கற்பனை காதல்ஏற்கனவே திருச்சியில் கல்லுரி மாணவி ,சேலம் நூற்பாலையில் வேலை செய்து வந்த பெண்ணும் ,கோவையில் ஒரு பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் ஒருவன் இப்படி மாதத்திற்கு இப்பொழுது எல்லாம் இரண்டு மூன்று செய்திகள் வருகிறது  இதை போல் 
ஒரு தலை காதலால் வந்த,வக்கிரத்தின் உச்சகட்டம் ஒரு பெண்ணின் முகம் ,கை கால் சதைகள் சிதைக்கப்பட்டு,கண் பார்வை பறிக்கப்பட்டு மற்றும் உயிரும் சேர்ந்து பறிக்கப்பட்டு உள்ளது. 
இப்பொழுது அவதிபடுவது யார் பெண்ணை இழந்ததோடு இல்லாமல், இத்தனை நாள்கள் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனுபவித்த வேதனையின் வலி எத்தனையோ...  மீண்டு வந்துவிடுவார் என்று கனவோடு இருந்திருப்பார்கள் அல்லவா. 
 அந்த ஒரு தலை காதல் (தறுதலை ) பைத்தியங்கள் செய்யும் செயல் அவரை சுற்றி உள்ளவரையும் பயித்தியமாக ஆக்கி விடுகிறது 
இந்த பைத்தியங்கள்  சொல்லும் சில வசனங்கள் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள ஓன்று 
"எனக்கு கிடைக்காத ஓன்று யாருக்கும் கிடைக்ககூடாது என்பது" ,
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி விட்ட காலம் இது.
இந்த காதல் வெறியை)யாரால் ஏற்றி வைக்கபடுகிறது என்ற விவாதத்தில் முதலிடம் பிடிப்பது சினிமாதான், 
அடுத்து நண்பர்கள் வட்டம் , "ஒருத்தியும் திரும்பி பாக்கலையாட  மச்சி "ஏன்டா நீயெல்லாம் உன் பிறப்பே வேஸ்ட்டா" என்பது மாதிரி சொல்லி ஏற்றி விடும் மடையர்களின் வசனம் மீதம் இருப்பது அவர்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள், காதல் என்பதே இங்கு இருவர் முடிவு செய்ய வேண்டியது.
விருப்பம் இல்ல பெண்ணினிடம் போய் காதலி,காதலி என்றால் எப்படி ?
பிடிக்கவில்லை,என்றால் விட்டு விட வேண்டியதுதானே.அதை தொடர்ந்து மிரட்டி காதலிக்க சொல்லுவது முட்டாள்தனம் என்பது தெரியாத இந்த ஒருதலை காதலுக்கு 
ஒரு பெண் எதோச்சியமாக பார்க்கும் பார்வையை கூட புரியாமல் அந்த பெண்ணின் பின்னாலே சுற்றுவது (என் கவிதையில் கூட சொல்லி உள்ளேன் )
அப்புறம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று கதறுவது சாராய கடையில் போயி சரக்கு அடிக்க வேண்டியது 
அங்கு பொறுக்கி திங்கும் நண்பர்கள் வட்டம் அதை கொளுத்தி கொளுத்தி போட்டு கடைசியில் அந்த பெண்ணையே கொளுத்தி விடுவதருக்கு துண்டுகின்றனர்.
என்ன சொல்வது இந்த முட்டாள் நண்பர்களையும் ஒரு தலை காதலையும் 
இங்கு என்னதான் பெண் சுதந்திரம் பேசினாலும்,எழுதினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
எப்படி பெண்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வது ஒரு சொட்டு கண்ணீரை தவிர,

இன்னும் ஒரு வினோதினிக்கு இந்த கொடுமை நேருமுன் சட்டம் விழித்துக் கொள்ளுமா??
குற்றம் புரிந்தவனுக்கான கடுமையான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை பொதுஇடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

நன்றிகள் 
அன்புடன் 
த.நந்தகோபால் 


காற்றாடி கனவு



வண்ண வண்ண காற்றாடி விட வேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே இருந்து வந்தது.இளைஞ்சனான கணேசனுக்கு 
ஆனால் முன்பு நடந்த சம்பவம் அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்ட காரணத்தினால் பயம் வந்து விடும் அவனுக்கு,
 கணேசன் சிறுவனாக இருந்த பொழுது பெரியப்பா மகன் ஆதி தான் நண்பன் ஆனாலும் அவன் இளைஞ்சன் இருந்தாலும் ,
கணேசன் மீது ஆதிக்கு பாசம் அதிகம்,பள்ளி விடுமுறையில் என்றால்  எங்கையாவது விளையாட்டு என்று கூட்டி கொண்டு போவான்.
அதில் பட்டம் விடுதலில் தன்னை மறந்து போவான்.பறவையின் சிறகை போல ஆகி விடும் அவன் மனம் கணேசனின் மனமும்தான்,
இப்படி சென்று கொண்டு இருந்த நாளில், ஒரு நாள் பட்டம் விட மொட்டை மாடிக்கு சென்று பட்டம் விட்டு கொண்டு இருந்தான்ஆதி .
கணேசன் வேடிக்கை பார்த்து கொண்டும் நூலை பிடித்து கொண்டும்  இருப்பான்.கொஞ்ச நேரத்தில் 
திடீர் என ஆதியின் பயங்கரமான அலறலை  கேட்டு திரும்பினான் பட்டதை மட்டுமே கவனித்து கொண்டு இருந்த கணேசன். 
ஆதி தரையில் விழுந்து கதறி கொண்டு இருந்தான்.இவனும் கதறி அடித்து கொண்டு எல்லோரையும் கூப்பிட்டான்.
ஆதியின் கால் உடைந்து வரும் ரத்தத்தை பார்த்து இதயபடபடப்பில் மயங்கியே விட்டான் கணேசன்.
எலும்பு ஒடிந்து பெரிய கால் கட்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,குணம் அடைந்தான் ஆதி ஒரு மாதத்தில்,
ஆனால் கணேசனுக்கு ஆறு மாதம் பயத்திலேயே கழித்தான்.பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணம் அடைந்தான்.
இந்த நிகழ்ச்சிகளினால் பெரியவனாகியும் உள் மனதில் இன்னமும் அதன் பயம் இருந்து கொண்டேதான் இருக்கு.
இன்று எதோச்சியாக அந்த ரோட்டின் ஓரம் நடந்து வந்து கொண்டு இருந்தான்.கணேசன் 
அப்பொழுது சிறுவர்கள் பட்டம் விட்டு கொண்டு இருந்தார்கள்.அதை பார்த்து ஆனந்த பட்டு கொண்டே தானே அந்த பட்டம் விடுவதை போன்று நினைத்து கொண்டே வந்தான் கணேசன் 
 அதுதான் இப்போ பட்டம் விட ஆசை வந்து விட்டது.ஆசை எல்லாம் வந்து என்ன செய்வது ஆனால் கணேசனின் மனம் பயம் அடைந்து பழைய  நினைவுகளுக்கு சென்று விடுகிறது.இப்படி யோசித்து யோசித்தே இரவு ஆகி விட்டது.அதை மறந்து விட்டு தூங்க போயி விட்டான் .இப்பொழுது கணேசன் பட்டம் விட்டு கொண்டு இருந்தான் தைரியமாக கனவில்     

தேவனின் குரல்




கிறிஸ்துவ ஆலயத்தில்
 தன்னத்  தனியாக
 எரிந்து கொண்டு இருந்த
 மெழுகுவர்த்தி 
சட்டென அணைந்து 
விட்டதுதென்று 
ஏதோ தவறொன்று 
நிகழ்ந்து விட்டதென்றர் பாதிரியார்.
உடனே தேவனின் குரல் 
வேடிக்கையாக சொன்னது 
தவறொன்றும் நிகழவில்லை 
அதன் தரம் அவ்வளவுதான் என்றது பாதிரியாரிடம் 

Saturday 9 February 2013

அன்பே அன்பே (சிறு கதை)



திடிரென ஊரில் இருந்து ,ஒரு செய்தி  பெற்றவளுக்கு  உடல் நலமில்லை!’ அதை கேட்டவுடன் சரவணனின் மனம் கவலையில் முழ்க ஆரம்பித்தான்.
“உடன் வைத்து பார்த்து கொள்ளலாம் என்றால் மனைவிக்கும் அவனின் அம்மாவுக்கும் ஆகாது.இந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததில்  காலம் போயி விட்டது. இதில் வேறு ஊரில்  அவள் கிராமத்தில் மனைவியின் அம்மாவுக்கும் உடல் நலமில்லை! ஏற்கனவே இங்கு இருக்கும் வீட்டு ஓனர் எப்போ வாடகை எற்றுவர் என்றே தெரியவில்லை மேலும் வருமானமும் போதாது.என்ன செய்வது  அதிகப்படியாக இதை பற்றி யோசித்து கொண்டே அலுவலகத்தில் வேலையும் ஓடவில்லை வாழ்க்கை எனும்  தேடுதலில் எல்லாமே தொலைந்துதான் போய்கிறதா?  அம்மாவை கூட்டி வரலாம் என்றால் கத்துவாள் உங்கள் அம்மா மட்டும் ஒசத்திய? என்று சண்டைக்கு வருவாள் அவள் அலுவலகத்தில் சந்தோசமாக இருப்பாள் ..
அன்று மாலையில் அலுவலகம் விட்டு நடந்து வருகையில் பிள்ளைகள் ஓடி வந்து பாட்டி வந்திருக்குது என்றனர்..

அவன் மனைவி "வாசலில் வாங்க காபி போடவா?ஏன் களைச்சி போயிட்டிங்க"என்று சொல்லி "அம்மா வந்து இருகாங்க".உடனே சரவணன் ஒரு அலட்ச் சிய பார்வையை வீசி விட்டு உள்ளே போயி பார்த்தான் கட்டிலில் படுத்திருந்த அம்மா அவனை பெற்றவள் அதிசயித்து நின்றான் சரவணன்.இரவு வேளையில் என்னடி ஆச்சி உனக்கு எப்படி இதெல்லாம்  என்று கேட்டான் அன்போடு

வெளிய இருந்து வரும் பொழுது அம்மா வந்து இருகாங்க நான் உன் அம்மா என்றுதான் நினைத்தேன்.

என் அம்மாவுக்கு ஓன்று குறை இல்லங்க கூட என் பொறந்தவங்க நாலு பெரும் நல்ல பாத்துக்குரங்க,வேறு ஏதோ ஏதோ சொல்லி கொண்டு இருந்தாள் 

அன்பு என்றால் பெண்தானே அதை வெளிபடுத்தும் விதத்தில்தான் மாறுபாடு எல்லாம் என்று நினைத்து விட்டு,
அவளிடம் வேறு எதுவும் கேட்க அவனுக்கு தோன்றவில்லை 
அன்போடு அணப்பதை  தவிர 

Thursday 7 February 2013

துகிலுரிக்கும் துரத்தல்கள்






மெல்லிய வெளிச்சத்தின் ஒளி
அடர்த்தி குறைய குறைய
அருகில் படர்கின்றது
உருவத்தின் விரல்களும் கால்களும்
நீண்டு கொண்டே போகிறது
ஒரு பூதகணங்களை போல
வெள்ளை அணுக்களில் (ஒய்ந்து )ஒளிந்து கொண்டு
மிக மெதுவாக பரவ ஆரம்பித்தது.
இருண்ட குகைக்குள் சென்ற ஒளி
அமிலங்களை விட அபாயம்
வடிவை போன்று அமர்ந்து
இனி இருத்தலில் இருப்பது
உயிர்க்கும் நிர்வாணங்கள்
சந்தடியற்ற சாகசத்தில்
குப்பைகளில், குவிந்து கிடக்கின்றனர் குபேரங்கள்
அதிர்ச்சியில் வழி நெடுக துவளுகின்றன
உருவத்தின் கண்கள்
பிரகாசமற்று  பிசுபிசுத்தபடி
பயத்தினால்................

Wednesday 6 February 2013

ஒரு மர வெட்டியிடம் கடவுளின் கெஞ்சல்




என்னையாவது 
இளப்பாற விடுங்கள் 
மரம் வெட்டுபவர்களை பார்த்து 
கெஞ்சுகிறார் 
 மரத்தடி விநாயகர் 

Sunday 3 February 2013

மரணத்தின் வாசல்




சாளரம் இல்லாத அறையில்
 பயங்கரத்தின் நிழல்கள் 
எல்லா திசைகளிலும் 
இதாக இருக்குமா? அதாக இருக்குமா?
என்று ஓலையிட்டு கொண்டு இருக்கிறது 
இந்நேரம் ஒளியின் கீதங்கள் 
கீற்றின் வழியே வந்து கொண்டு இருக்கலாம் 
ஒளியை எடுத்து கொண்டு போவதற்கு