TV

Wednesday 20 November 2013

தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ...




கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்..
எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும்
நீண்டு கொண்டிருக்கும்
பதில்கள் எப்போதும்...

இருட்டு வேளையில்வானம்
பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய்.
யாவரின் தேடல் சுவாசமில்லா
பனியின் திராட்டம்!

தலையசைப்புகாய் காத்திருப்பும்
சலனப்பட்டு எழுந்துவிட
நிசப்தமான தூக்கம் இல்லா
பின்னலிடப்படும் பாதச் சுவடுகள்
உணர்வுப் பிழம்புகளை எல்லாமே
பொய்யாகிவிட்ட போர்க்களம்
அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது?

தேய்தலுக்கு உட்படவும் இல்லை
உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும்
எத்தனையோ சமாதானங்களை சொன்ன
மூகமுடி வக்கிரங்கள்.
எல்லார் முகத்திலும் இறப்பு
இழுத்து, மூடப்பட்ட போர்வைகள்
.மனிதர்களைத் தேடியே
தொலைந்த தருணங்களில்
எப்பொழுது நிகழும் தியானம்...

அபிப்பிராயமின்றி இயல்பிற்கு
எதிராய் தனிமையின் நீளம்
இருள் சூழ்ந்த அதே குரூரம்
வறண்டு பாலையென
அமிலத்துளிகளில் தீர்ந்த சொற்கள்
தொலைந்து விட்ட இடத்தில் பதிந்திருக்கக்கூடும்.
ஏதேனும் பகுதியொன்றில் பிம்பமாய்

Tuesday 17 September 2013

உடைபடா உலகம்

என்றுமே எண்ணியதில்லை
இறுக்கி இருக்கும் கயிற்றினை
வர்ணம் பூசி நாகரிக மனிதர்களாய்
மீண்டும் வெளுத்த அம்மணத்திற்காய்
நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று
சுமந்தலைந்த காயங்களுடன்
வாழ்வின் வறட்சியாக
நிராதரவான உணர்வும்
மரங்களின் மௌனமும்
இரண்டும் அங்கேதானிருந்தது
ஒன்றின் மேல் ஒன்றாக
காற்று வரைந்து விட்டு போன
ஓவியமான நெளி அலைகள்
நிரம்பிய நிழல் நிதானமிழந்து
கசந்து வெளியேறும்
அர்த்தங்களின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்.
கதவுகளை மூடிவிட்டு முனகும்
தவறிய அழைப்புகள்
கட்டப்பட்ட கடிவாளங்கள்
உடைபடாத ஒருஅந்தி பொழுது
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
சாயும் இளமஞ்சள் நீர்க்குமிழில் உடைந்தபடி
பிணங்களின் மீதேறியே மீதமாகும் மீதம்

Saturday 6 July 2013

நச்சதிரமாய் மின்னும் பொன்னே



மொட்டை மாடி விட்டத்தில் 
உன்னை நினைக்கும் 
ஒவொரு தருணமும் 
நச்சதிரமாய் மின்னுகிறதோ
 வானில் 
வேண்டுமானால் இன்றைய இரவில் 
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை 

நினைத்து இருப்பேன் என்று????

Tuesday 11 June 2013

தீராத தீவிரவாதம்



ஏதேனும்  பாதுகாப்பை நிச்சயித்து கொள்ளும்
கண்களில் எல்லாம் அர்த்தங்கள் அடுக்கபடுகின்றன 
சிலது சில மாதிரி என்று 
சொல்லுவதற்கும் செய்வதற்கும் ஏதேனும் 
வேண்டுமென்றுதான் ஆரம்பிக்கிறது 
ஆளை கொல்லும்  ஆட்டம் 
இரும்பு கம்பிகளாக ஆகி போகின்றன பகைமை  
அணுகுண்டு அணுக்களில் அடுக்கபடுகின்றன 
வெடித்து சிதறும் சடலங்கள்  
உறைந்து கிடக்கும் குருதியில்
இறைந்து கிடக்கும் ஈக்கள்தான் 
எப்பொழுதும் (தணியும் )தீவிரவாதம்??? 

Saturday 8 June 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு



 இரு விழி கனிகள் வீரிய நாதத்துடன் எழும், விடியலில் 
நெற்றி பொட்டில் நிலத்தின் சுருக்கங்கள்
பூமியெங்கும் புழுதிகள்
 வறண்ட பூமியின் ஓரத்தில் பாறை மண் மூடி கிடக்க 
 நடுவே நீளும் ஒரு வழி பாதையில் ஈந்து போன கோமணத்தில்
பாதி கால் ஊன்றி பயிர் இட்டு, உழவென்னும் 
பெயர் சொல்லி இரத்தம் பிழியும் இரசவாத்தில்
தகிக்கும்  வெயிலில் திகைக்கும்   வியர்வை துளிகள்
அதன் மேல் கருகி போன பயிர்கள்  
வந்தாலும் வருவேன் என்றொரு உறுதிபடா
உறுதி மொழியுடன் உலகில் பிரவெசிக்க் தயங்கும் மழை துளிகள் 
காய தொடங்கி  காலம் முதல்  காய்ந்து போன
 வயிற்றுடன், விட்டத்தை பார்த்த பருக்கைகள் 
 எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம் நாளைய வரலாறு
 பட்டினி சாவுடன்?????? 

Tuesday 4 June 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்




இரவு முழுவதும் களைத்து துறங்கும்
சந்தோஷமான நாள் ஒன்றின் விடியலில்
வெள்ளை சட்டையும் அதன் ஓரம்
மங்களகரமான மஞ்சளும் இன்னும்
சந்தோசம் வேண்டுமென்று கிளம்பியது
சுய நினைவின்றி  அரசாங்கத்திற்கு வரி கட்டும்
ஆசையில் நண்பர்களுடன் 
 வட்ட மேஜை மாநாட்டில்,
 அங்கு ,எங்கும் இசைக்கபடுகிறது.
காதல் கீதங்களும்  சோககீதங்களும் 
போதையாற்றின் நிழலில்  கரை ஒதுங்கி  
மீண்டும்  திரும்பி விடுகின்றன
நாற்றமெடுத்த சாக்கடைகளுடன் 
குறைவின்றி குடித்தலில் குளிக்கிறது இறப்பு
 தன் ஆனந்தத்தை

Tuesday 7 May 2013

வன்முறையாகின்ற வரம்


பற்றியெரிந்தது தனிமையின்  தவிப்பு 
வெளிறிக் கிடக்கிறது  வெள்ளை மனம் 
கனத்த மௌனத்துடன்
நிலைநிறுத்திப் போகிற நினைவுகள் 
பூர்த்திசெய்கிற புலம்பல்களும் 
சுற்றத்தில் மனிதரும் இல்லை..
உறக்கம் தொலைத்த விழிகள்
வெகு தந்திரமாகத் திணிக்கிறது
எதையோ  நினைத்து அதன் வலிகளில்
வாழ்வின் வழியை சுருக்கி 
பிளவுபட்ட மர  கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம் 
வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு