TV

Sunday 30 December 2012

தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?

இன்றைய இரவின் இறுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற கலாச்சாரம் ஓன்று இருக்கு.அது வந்து விட்டலே இரவு முழுவதும் விழித்து கொண்டு சுண்ணாம்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்லி எழுதி வைத்து ரோட்டையே நாற வைத்து பின்பு கைபேசி கையில் எடுத்து   மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி அந்த நபர்களை தொல்லை செய்தும் ,சரக்கடிக்கும் நண்பர்களும் போதையில் சந்தோஷமான நண்பர்களும் பண்ணும் அலப்பரை தாங்க முடியாதுமணி பனிரெண்டு ஆனவுடன் பெரும் கூச்சல் போட்டு கொண்டும் . போகும் வரும் முன் பின் தெரியாத நபர்கள்களிடம்  எல்லாம் "Happy New Year"  சொல்லி சந்தோஷ கூச்சலில் எல்லாம் மாமன் மச்சான் ஆகி விடுகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும்  வியாபாரமும் அரை குறை ஆடைகளின்  நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?போதையில் இருந்து  இதில் தான் ஆரம்பிக்கும் சில  பழக்கங்களை பற்றி போதையில் சபதம் எடுக்கும் பழக்கம் நண்பர்களின் மத்தியில் இந்த வருட கடைசியில் எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விடுவேன் என்று சபதம் எடுத்த எனக்கு தெரிந்த ஒரு நபர்,அந்த பழக்கம் வந்த ஆண்டுகளில் அதிகம்தான் ஆகியது.கேட்டால் கவலை யாக இருக்கு அதனால்தான் என்கிறனர்.புகை பிடித்து நூரையிரல் புற்று நோய் வந்து இந்த வருடம் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறார் அந்த நபர்.வருடாவருடம் சபதம் செய்த நபர்தான் இவர்.நண்பர்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றால் சபதம் செய்து தோற்பதை விட நாம் சுய கட்டு பட்டுடன் நம் குடும்பத்தை எண்ணி அந்த பழக்கத்தை விடுவது உத்தமம்.இனி வரும் காலங்களாவது எதாவது மாறுதல் ஏற்பட இருக்குமா பார்போம்.

என் வாழ்வின் இருண்ட தினம்












மருத்துவமனையின் படுக்கையில் 
அம்மாவின் இறுதிமூச்சின் ராகங்கள் 
தன் சுருதியை இழக்க ஆரம்பித்தது 
அம்மாவின் முகம் மிகவும் அழகானதாக 
 மாறி கொண்டே இருந்தது
தன் கொடுமையின் வலியெல்லாம்
 கொஞ்ச கொஞ்சமாக விலக தொடங்கியது 
அம்மாவின் கண்களில் 
தவிப்பு மட்டும் 
அனாதையாக ஆக்கப்பட்ட என்னை பார்த்து, 
லேசாக துடித்து கொண்டு இருந்தது அம்மாவின் இதயம்,
சீரற்ற ரத்த ஓட்டமும் சிதைந்து போன முதுமையின் முனகலும்
அழுத்தப்பட்டும்  உந்தப்பட்டும்  இழுக்கப்பட்டும் 
 ஏப்போதும் வெடித்துவிடும் போல இருந்தது எல்லாம் 
சுடுபடுத்தபட்ட கொதி நீரை போல 
கொதித்து வழிந்து கொண்டு இருந்தது என் கண்ணீர் 
காற்று புகுதலில் வயிற்றின் திறன் வெடிக்கும் அளவு 
  அது உப்பியிருந்தது திடுமென  செயலற்ற திறனில் 
ஒவ்வொரு உறுப்புகளும் நிரந்தர உறக்கம் கொள்ள ஆரம்பித்தன.
விழித்து கொண்ட ஆன்மாவோ  
சொர்கத்தின்  வாசப்படியில் 
காத்து கொண்டு இருந்தது 
தேவர்களின் வரவிற்கு 
சிறிது நேரத்தில் தேவர்களும் வந்து
அழைத்து சென்றன அம்மாவின் ஆன்மாவை அது சிரித்து கொண்டே(ஆன்மா) 
நானோ அழுது கொண்டே ?????????????????????



Friday 28 December 2012

அம்மாவின் அகால மரணம்


                                                                                                                           





                                                                                                                           





ஒரு மரணத்தில்தான் இன்னொரு மரணம் ஏற்படுகிறதா ?தெரியவில்லை எனக்கு,

கார்த்திகையின் தொடக்கத்தில் அக்காவின் சொந்தத்தில் ஒருவரின் மரணம் எங்கள் வீட்டில் பிற நபர்கள் யாரும் வராத காரணத்தினால் நானும் என் அம்மாவும் மட்டும் கலந்து கொண்டோம்.சடங்குகள் முடிந்து வீட்டிற்கு வந்து வெளியே தண்ணீர் தெளித்து முன் பகுதியில் சிறிய குளியல் அறை இருக்கும் அதில் குளிர்ச்சியான தண்ணீரில் (மின்சாரம் இல்லாததால் சுடு தண்ணீரும் இல்லை)  குளித்தார் அம்மா  (என்ன சம்பரதயமோ கருமமோ) வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை அம்மா சிறிது நேரத்தில் அடிக்கடி தும்மல் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டாகி விட்டார்.சில நாள் தொந்தரவு ஒன்றும் இல்லை மீண்டும் ஆரம்பித்தது மூக்கடைப்பு இருமல் அடிக்கடி மூச்சடைப்பு  மருத்துவரிடம் சென்று காண்பித்ததில் சளி கெட்டியாக கட்டி கொண்டு இருக்கு மருந்து தருகிறேன் என்று நான்கு நாளைக்கு தந்தார்.அந்த  மாத்திரைகள் சரி வரவில்லை அடிக்கடி மூச்சடைப்பு இருந்து கொண்டே இருந்தது.திரும்பவும் மருத்துவரிடம் அவர் பார்த்து விட்டு எல்லா பரிசோதனைகளுக்கும் எழதி கொடுத்து விட்டார்.எல்லா பரிசோதனைகளையும் பார்த்து விட்டு "சளி கெட்டியாக கட்டி கொண்டு இருப்பதால் மூச்சு விட சிரமமாக இருக்கு "கெட்டி சளியை  இரு முறைகளில் எடுக்கலாம் ஓன்று குழாய் மூலமும் இன்னொன்று ஊசி மூலமும் மருந்து செலுத்தி சிறு நீரில் வெளி கொண்டு வரலாம் என்றார்.குழாய் மூலம் எடுப்பதை விட ஊ சி மூலம் எடுப்பதே நன்றாக இருக்கும் ஏன் என்றால் அம்மாவிற்கு ஏற்கனவே இருதய தௌந்தர்வு இருந்ததால் ஊசி மூலம் கரைப்பதுதான் மிகவும் நன்றாக இருக்கும் அந்த வசதி சேலத்தில் கிடையாது.கோவைக்கு ராமகிருஷண மருத்துவமனக்கு எழுதி தருகிறேன் அங்கு சென்று விடுங்கள் என்றார் மருத்துவர்.உடனே சென்று காண்பித்ததில் அட்மிட் ஆகி விட சொல்லி ஆகியும் விட்டது முதலில் இரண்டு நாள் தொந்தரவு குறையவில்லை மூன்றாம் நாள் எந்த மூச்சடைப்பு தௌந்தர்வு எதுவும் இல்லை.மருத்துவர் பார்த்து விட்டு அம்மா நல்ல இருக்கிறார்கள் நாளை டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்றும் சொல்லி விட்டு சென்று விட்டார்.

அருகில் இருந்த எனக்கு சந்தோஷமான சந்தோசம் அப்பாடா நாளை அம்மாவுடன் வீடு திரும்பி விடலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டே அம்மாவிற்கு மாலை நேர பால் வாங்கி கொண்டு வந்தேன்.சிறிது நேரத்தில் கை பேசியில் அழைப்பு அண்ணனின் மகள்( ukg படிக்கிறாள் )பாட்டியிடம் பேச வேண்டும் என்றாள்.நானும் அம்மாவிடம் கைபேசியை கொடுத்தேன்.அவர்களும் நன்றாக பேசி விட்டு நாளை இந்நேரத்திற்கு எல்லாம் வீட்டிற்க்கு வந்து விடுவோம் என்று குழந்தையிடம் சொல்லி கொண்டு இருந்தார் அம்மா பேசி முடித்து விட்டு மாத்திரையுடன் பால் ஊற்றி  கொடுத்தேன்.பக்கத்தில் நடந்த நகைசுவையான சம்பவத்தை சொல்லி என்னை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார்.இருபது நிமிடம் இப்படியே கழிந்தது.சற்று நேரத்தில்,எனக்கு ஒரு மாதிரியாக இருக்குடா அம்மா என்னிடம் சொன்னார்.சரிம்மா அப்படியே படு நான் நர்சை கூட்டி கொண்டு வரேன்.டாக்டர் வந்துடவர் சார் கொஞ்ச நேரம் இருங்க என்றார் நர்ஸ்.அம்மாவிடம் ஓடினேன் நான்.மூச்சு விட சிரமம் ஏற்பட்டு கால்கால்களிருந்து  இழுத்து கொண்டு மூன்று முறை உலுக்கிய அந்த மூச்சு சட்டெனெ நின்றது.நான் கதறி அழுத்து கொண்டே அம்மாவின் படுக்கை தள்ளி கொண்டே ஓடுகிறேன் icu வார்டுக்கு என்னுடன் நர்ஸ் மற்றும் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மனிதாபத்துடன் ஓடி வருகிறர்ர்கள்.என்னை வெளியே நில்லுங்கள் என்று சொல்லி விட்டு முதல் உதவி செய்ய ஆரம்பித்தனர் அங்கு இருந்த மருத்துவர்கள்.எனக்கு என்ன நடக்குதுன்னு ஒன்றுமே புரிய வில்லை கண்களில் கண்ணீரும் அழு குரலும் மட்டும்தான் என்னால் உணர முடிகிறது.என் அருகில் சொந்தங்கள் என்று யாரும் இல்லை இன்றைய தினத்தை போல அடக்கப்பட்ட நீர் குமிழியை போல் அடித்து கொண்டு வந்தது அழுகை அதன் பின் நிறைய  பயத்துடன்  என் அண்ணனிடம் தகவல் சொல்லி வர சொன்னேன்.அவரும் வந்து சேர்ந்தார்.இருண்ட உலகத்தின் இரவல்லம் மரணத்தின் தருவாய் என்னவென்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்.நாடி துடிப்பு இருதய துடிப்பு அனைத்தும் மாறி மாறி ஆட்டம் காண்பித்தது.காலை  10.24 வரை கடைசியாக அம்மாவின் மூச்சற்ற உடலை காண்பித்தனர் மருத்துவர்.சார் ஒன்றும் செய்ய முடிய வில்லை மன்னிக்கவும் என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த உடலுக்கு சென்று விட்டனர் மருத்துவர்கள்.

என் அம்மாவின் மரணம் நிகழ்ந்த நாள் (டிசம்பர் 23 காலை 10.24 )வைகுண்ட் ஏகாதேசி எனக்கு சொர்க்கத்தில் நம்பிக்கை இல்லைதான் ஆனால் என் அம்மா அந்த சொர்கதிற்க்குதான் செல்ல வேண்டும் என்னுடைய ஒரு வித ஆசை 

வந்தவர்களும் இதை சொல்லித்தான் ஆறுதல் சொல்லுகிறார்கள் 

 இருப்பினும் அம்மாவின் மரணத்துக்குப் பின்

ஏற்பட்டு கொண்டு இருக்கும் தனிமையின் பயத்தை
தத்துவ புத்தகங்களை கொண்டுதான்  நிரப்பி கொண்டு இருக்கிறேன் கண்ணீருடன் 
'ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)


Tuesday 18 December 2012

மாற்றம்










முதுமையை
 ஏளனம் செய்து விட்டு 
திரும்புகையில் 
எட்டி பார்த்து
ஏளனம் செய்தது 
நரை முடி 

Saturday 15 December 2012

வித்தியாசமற்ற முதலும் கடைசியும்


                        
                         












நடை தளர்ந்து நடுங்கி போயி 
கீழே விழுகின்ற முதுமையின் 
 கால்களையும், 
ஆடை அணிய தெரியமால் 
தடுமாறி 
கீழே விழும் 
குழந்தையின் கால்களையும் 
 இரண்டையும்  
வித்தியாசபடுத்த முடியவில்லை
 என்னால் 

Tuesday 11 December 2012

நானு ஸ்குலுக்கு போக போறேன்


அப்பாவும் அம்மாவும் காட்டு வேலைக்கு போயிக்றங்க 
சாயிந்தரதான் எப்பவும் வருவாங்க,வந்து 
தினமும் எனக்கு கஞ்சிய ஊத்திகொடுத்திட்டு எங்கம்மா,
அது கையெல்லாம் திட்டு திட்டு இருக்கும்.
எண்ணை பூசிக்கிட்டுதான் படுக்கும் அழுதுகிட்டே இருக்கும் 
ஆனா எங்கப்பாதான் சாயிந்தர வறப்ப,
தடு மாறிக்கிட்டே வரும் ஏன்தான் தெரியல 
எங்க அம்மா ஒரு தரம் சொன்னிச்சி
இன்னும் கொஞ்ச நாள்தான் ,
 ஸ்குலுக்கு போலாம் தம்பியோடன்னு
நானும் தம்பியும்  ஸ்குலுக்கு போயி படிச்சி நம்ம சுந்தர அண்ண மாரி,
கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கிட்டு வேலைக்கு போவோமே
அப்ப என்ங்கம்மாஅழவே விட மாட்டேன்.
என்னாண்ணே சொல்லிட்டு நானே அழுவுரனே................................. 

Saturday 8 December 2012

விதியை எண்ணி கண்ணீர்










தின நாளேடுகளை 
திறக்கையிலே 
தினம் தினம் திருட்டு,
கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு ,
சினிமா செய்திகள், அழகியின் அட்டை படம் ,
எல்லாம் படித்து முடிக்கையில் 
கண்ணீர் சிந்தியது
 உருமாறியதை எண்ணி
 காகிதமாகி போன மரம் 

Monday 3 December 2012

மனதின் வலி










சாலையோர சிகப்பு விளக்கின் விளம்பில் எல்லாம் ஒரு கூ ட்டம் 
கூட்டத்தில் ஒருவனாய் கவனித்து இருக்கிறேன்.
தந்தையின் வயதொத்த மனிதர்களை யும்  
வயிற்றின் தேடல்களையும் 
 பார்க்கிறேன் 
விழிகளில் பயங்கள் அவமானங்கள் 
உருட்டப்பட்ட தாயங்களை போல்,
 தத்தளிக்கிறது முதுமை 
கடைசியின் கணம்
 சுமைகளை விட கனகனக்கிறது  
என்னில் 
முதுமைக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம் என்று? 

கனவே கனவே



 முகமூடி அணிந்த மனிதம் 

முகவரி எழுதுவதில்லை 

முகமூடியின் இருப்பிடம் 

இதுதான் என்று 

கலங்கும் கலாச்சந்திப்பில் 

சூழ்நிலைகேற்ப 

கிழித்து எறியப்பட்ட காகித எண்கள் 

நாளை ஓன்று கூட்டி கழித்து 

கணக்கிட்டு கொண்டுஇருக்க 

சில நாள்கள் கிழிக்கும் முன்பே 

 கந்தலாகி போகின்றன  கனவுகள் 

Sunday 2 December 2012

உலகம் இது உலகம்

உலகம் இது உலகம்

மொழியில்லா  உலகை  நினைத்து சந்தோசப்பட்ட தருணங்களில் 
அச்சிடப்பட்ட காகிதம்
காற்றில் அடித்து வந்து காலடியில் கவிழ்ந்து
 பிரித்த பொழுது 
புரியாத மௌனத்தில் மிரட்சியுடன்
படைத்தவனின் புரிந்த உடல் மொழியில் வினவினேன் படைத்தவனிடம் 
என்ன இது அசிங்கமாய் என்று
படைத்தவனின் பதில் அதுதான் ஆங்கிலம் என்றும் 
பக்கங்களில் ஓன்று ஒன்றும் ஒவ்வொவொரு மொழி என்றும் சொன்னது 
ஒரு பக்கத்தில் மட்டும் அவ்வளவு அழகு  இது என்னவென்று கேட்டேன் 
இதுதான் தமிழ் என்றார் திடுக்கிட்டு கண் விழித்தேன் .
அது இன்னமும் கனவாகவே இருந்தது 

திருமணமற்றவனின் பயம்


திருமணமற்றவனின் பயம்
ஏதோ எதோ நிகழ்வுகளில் முழ்கியே
ரயில் பயணத்தில்
திடிரென
எங்கோ பழக்கப்பட்ட புன்னகை
முகமூடி அணிவிக்கப்பட்டு பிழைத்திருக்கிறது
பள்ளிகால நட்பு
எதோ பழக்கமுள்ளவர்களின்
கேள்விகளை போல்,
அறிமுக உரையாடல்
ஏதோ ஏதோ கேள்வி பதில்கள் முடிந்தது .
கடைசி வரை கேட்கவே இல்லை
திருமணம் ஆகிடிச்ச,
குழந்தைகள் எத்தனனை
என்ற கேள்வியை 

யாதார்த்தத்தின் நகைப்பு


யாதார்த்தத்தின் நகைப்பு
மரத்தால் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையின்
பிம்பம்
தன் எதிரே நின்று
சிரித்து கொண்டது 
"சாயமற்ற பொம்மைக்கு
எத்தனை காயங்கள் "என்று 

அடையாளமற்ற அம்மா



அடையாளமற்ற அம்மா
வீடு முழுவதும் நிரம்பி  கிடக்கிறது
 அதிகாரத்தின் கோப குரல்
பார்ப்பவர்கள் எல்லாம் பார்த்து சொல்லுகிறார்கள்
என் முகத்தில்
அப்பாவின் அடையாளத்தை,
பிடிக்காத
 நான் கூட
அவரின் முதல் எழுத்தை பிடித்து கொண்டு
ஒவ்வொரு கையெப்பத்திலும்,
ஒரு உடைந்து  நசிந்து போன
சைக்கிள்,செருப்பு, நாற்காலி,கைக்கடிகாரம்
 இன்னும் கூட சொல்கிறது
அந்த அறை
 அப்பாவின் அடையாளத்தை,
பொம்மையாக்கபட்ட
அம்மாவின் அடையாளத்தை
சொல்லி அழுகிறது
அடுப்படி இன்னும்.............    Sad    

காதல் தூண்டில்


காதல் தூண்டில்
பேருந்தின் சந்திப்பில் எல்லாம்
அவளின் எதோச்சியான பார்வையை கூட,
கூட இருக்கும் கூட்டாளிகள்
டேய், மச்சி "அவ உன்னைதான்ட பாக்குற"
உசுபேத்தி உசுபேத்தியே ரணகளபடுத்தி விட்டனர்
இதயத்தை
வித்தியாசபடுத்துகிறேன்
நண்பர்களின் உருவத்தை விட
நான்கு நாளாய்
வராத தலை முடியை போல்,
 வடிவமைக்கிறேன்
நல்ல இருக்கும் முடியை
கண் தெரிந்தும்
கருப்பு கண்ணாடியை அணிகிறேன்
வித்தியாசபடுத்த 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றில் வித்தியாசம்
ஆனால் அவளின் பார்வை மட்டும்  ஒரே மாதிரி 

சாதியம்



சாதியம்
சில விலங்குகளின் 
கண்ணை மறைத்து,
கண்ணுக்கு தெரியாத
அலைவரிசையில்
இறக்கை கிழிபட்டு
ரத்தம் தெளிக்கிறது
இன்னும் ஒரு சில உயிர்களின்
மேல் மட்டும்.
(தர்மபுரியில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதினேன்)