TV

Tuesday 15 January 2013

பிள்ளைகள் படுத்தும் பாடு

வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்.ஒரு நாள் இரவு அழுது கொண்டு பேசினாள் சரசு கணவனிடம் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி ஆனால் வேலப்பனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான் இருக்கும் வரை நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தையாக இருப்போம் பேசமால் படு என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான் வேலப்பன். மறு நாள் காலையில் சரசு, வேலப்பனிடம் சொன்னாள்.கொஞ்ச நாள் நாம் பக்கத்துக்கு ஊரில் சம்பு அக்கா(சரசுவின் கூட பிறந்த அக்கா) வீட்டின் அருகில் இருக்கும் நம் வீட்டிற்க்கு போயி இருக்கலாம்.என்றாள்.சரி என்றான்.வேலப்பன் எப்படியோ சரசு நிம்மதியாக இருந்தால் சரி என்ற நோக்கத்துடன்,இப்போது குடி வந்து விட்டனர்.அவளின் அக்காவிற்கு முத்து ரங்கு என்று இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் உஷா ,சித்ரா என்று இரண்டு பெண் குழந்தைகள் எப்பொழுதும் அந்த குழந்தைகள் இவர்களின் வீட்டில்தான் விளையாடி கொண்டிருப்பார்கள்.சரசுவும் இப்பொழுது மிக உற்சாகமாக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.இதை பார்த்து சந்தோசம் அடைந்தான் வேலப்பன் அவனும் தன் பிள்ளைகளை போல் பாசமாக வெளிய அழைத்து செல்வது எல்லாம் வாங்கி தருவது எல்லாமும் செய்தான்.
வருடங்கள் பல ஓடின பெண்குழந்தைகளுக்கு திருமணம் ஆனது.ஆண் குழந்தைகள் பெரியவன் சூதாடியகவும்.சிறியவன் குடிகாரனாகவும் ஆகி விட்டனர் அவர்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.இன்னும் காலங்கள் ஓட ஓடஅக்காவின் மரணம் அன்று, சிறியவள் சித்ரா நம் பங்கு அம்மா என்ன வைத்துள்ளாள் என்று பெரியவள் உஷாவிடம் கேட்க மொத்தத்தில் இருவரும் அம்மாவின் நகை எவ்வளவு என்பதிலேயே குறியாக இருப்பது அம்மாவின் சாவு அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்பது சரசுவை மனம் கலங்க செய்தது.எப்படியோ ஒரு வழியாக காரியம் முடிந்து எல்லாரும் அவர் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டனர்.சரசுவின் அக்காவின் கணவனோ அந்த மகனிடமும் இந்த மகனிடமும் திட்டு வாங்கி கொண்டே வயிற்றை கழுவினர் சரசு பல முறை சொல்லியும் அவள் வீட்டிற்க்கு சாப்பிட செல்லவே இல்லை.ஒரு சில வருடங்களில் அக்காவின் கணவரும் (சுபரமணி)இறந்து விட்டார்.அன்றைய தினம்தான் அதிர்ச்சியில் உறைந்தே போயி விட்டாள் சரசு.பிணத்தை எடுக்க விடமால் சிறியவன் தண்ணியை போட்டு கொண்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்தான்.அண்ணன் தம்பி இருவருக்கும் அடிதடியில் அந்த சொத்தை எனக்கு தராவிட்டால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் என்றான் ரங்கு.அப்புறம் சரசு அழது கொண்டே சமாதனம் செய்தாள் ரங்கு கேட்கவே இல்லை.சரிடா பக்கத்தில் இருக்கிற என்னுடைய அந்த ஐந்து எக்கரவை நீ எடுத்துகடா முன்னே காரியம் நடக்க விடு என்று வழிந்தது கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் சரசு .சித்திக்காகதான் விடுறேன் என்றான் நல்லவனை போல் ரங்கு.எல்லாம் முடிந்தது.அதற்க்கு பின் யார் முகத்தையும் (சம்பு குழந்தைகளை)பார்க்கவில்லை.சில நாள்கள் மௌனத்துடன் கழிந்தது ஒரு இரவில் சாமி படத்தின் முன் சரசு கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.வேலப்பன் சரசுவின் கையை பிடித்து கொண்டு ஏன் அழுகிறாய்.
"நம்மக்குன்னு யாரும் இல்லை கொள்ளி போட குழந்தைகள் இல்லை என்று அழுகிறிய" கேட்டான் வேலப்பன.இல்லைங்கே
அந்த கவலையே இல்லைங்கே சம்பு அக்காவின் பிள்ளைகளை செய்ததை பார்த்த பின் எனக்கு கொஞ்ச நஞ்ச இருந்த ஏக்கம் எல்லாம் போயிடிச்சிங்க.பிள்ளைகள் இல்லமால் இருப்பது எவ்வளவோ பரவா இல்லை நிம்மதியகவாது போயி சேரலாம். நமக்கு குழந்தைகள் இல்லமால் செய்த கடவுளுக்கு நன்றிகள் சொல்றேன்.நம்மிடம் இருக்கும் சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமதிற்க்கு எழுதி வைத்து விடுங்கள்.இனி இங்கு இருப்பது வேண்டாங்க வேறு எங்காவது போயிடலம்ங்க என்று வேலப்பனிடம் சொன்னாள் சரசு. வேலப்பனும் சரி என்றான்.விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.

No comments:

Post a Comment