TV

Wednesday 16 January 2013

ஒளிந்து கொள்ளுகின்றன கவிதைகள்



நரம்பு திசுக்களில் 
திசைகள் அறியா பறவை போல் 
ஒளிந்து கொள்கிறது  கவிதை 
அதிகாலை
 ரோஜாவின் மீதுள்ள பனியும் 
நெடுநேர இரவின் அணைக்கப்படா 
வீதி விளக்கின் வெப்பத்தையும் 
பார்கிறது 
பெரும் சுவாசத்தோடு 
சோப்பு குமிழியை போல் வட்டமிடுகிறது 
காற்றின் அசைவில் அது உடைந்து அழுகிறது 
ஆனாலும் 
மின்சாரமற்ற 
வீட்டின் விரிசல்களுக்கிடையே 
வந்து விழும் 
நிலாவின் ஒளியை  போல 
அழகாக விழுகிறது
 வார்த்தை  
சில வரிகளில் 

No comments:

Post a Comment