TV

Friday 28 December 2012

அம்மாவின் அகால மரணம்


                                                                                                                           





                                                                                                                           





ஒரு மரணத்தில்தான் இன்னொரு மரணம் ஏற்படுகிறதா ?தெரியவில்லை எனக்கு,

கார்த்திகையின் தொடக்கத்தில் அக்காவின் சொந்தத்தில் ஒருவரின் மரணம் எங்கள் வீட்டில் பிற நபர்கள் யாரும் வராத காரணத்தினால் நானும் என் அம்மாவும் மட்டும் கலந்து கொண்டோம்.சடங்குகள் முடிந்து வீட்டிற்கு வந்து வெளியே தண்ணீர் தெளித்து முன் பகுதியில் சிறிய குளியல் அறை இருக்கும் அதில் குளிர்ச்சியான தண்ணீரில் (மின்சாரம் இல்லாததால் சுடு தண்ணீரும் இல்லை)  குளித்தார் அம்மா  (என்ன சம்பரதயமோ கருமமோ) வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை அம்மா சிறிது நேரத்தில் அடிக்கடி தும்மல் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டாகி விட்டார்.சில நாள் தொந்தரவு ஒன்றும் இல்லை மீண்டும் ஆரம்பித்தது மூக்கடைப்பு இருமல் அடிக்கடி மூச்சடைப்பு  மருத்துவரிடம் சென்று காண்பித்ததில் சளி கெட்டியாக கட்டி கொண்டு இருக்கு மருந்து தருகிறேன் என்று நான்கு நாளைக்கு தந்தார்.அந்த  மாத்திரைகள் சரி வரவில்லை அடிக்கடி மூச்சடைப்பு இருந்து கொண்டே இருந்தது.திரும்பவும் மருத்துவரிடம் அவர் பார்த்து விட்டு எல்லா பரிசோதனைகளுக்கும் எழதி கொடுத்து விட்டார்.எல்லா பரிசோதனைகளையும் பார்த்து விட்டு "சளி கெட்டியாக கட்டி கொண்டு இருப்பதால் மூச்சு விட சிரமமாக இருக்கு "கெட்டி சளியை  இரு முறைகளில் எடுக்கலாம் ஓன்று குழாய் மூலமும் இன்னொன்று ஊசி மூலமும் மருந்து செலுத்தி சிறு நீரில் வெளி கொண்டு வரலாம் என்றார்.குழாய் மூலம் எடுப்பதை விட ஊ சி மூலம் எடுப்பதே நன்றாக இருக்கும் ஏன் என்றால் அம்மாவிற்கு ஏற்கனவே இருதய தௌந்தர்வு இருந்ததால் ஊசி மூலம் கரைப்பதுதான் மிகவும் நன்றாக இருக்கும் அந்த வசதி சேலத்தில் கிடையாது.கோவைக்கு ராமகிருஷண மருத்துவமனக்கு எழுதி தருகிறேன் அங்கு சென்று விடுங்கள் என்றார் மருத்துவர்.உடனே சென்று காண்பித்ததில் அட்மிட் ஆகி விட சொல்லி ஆகியும் விட்டது முதலில் இரண்டு நாள் தொந்தரவு குறையவில்லை மூன்றாம் நாள் எந்த மூச்சடைப்பு தௌந்தர்வு எதுவும் இல்லை.மருத்துவர் பார்த்து விட்டு அம்மா நல்ல இருக்கிறார்கள் நாளை டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்றும் சொல்லி விட்டு சென்று விட்டார்.

அருகில் இருந்த எனக்கு சந்தோஷமான சந்தோசம் அப்பாடா நாளை அம்மாவுடன் வீடு திரும்பி விடலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டே அம்மாவிற்கு மாலை நேர பால் வாங்கி கொண்டு வந்தேன்.சிறிது நேரத்தில் கை பேசியில் அழைப்பு அண்ணனின் மகள்( ukg படிக்கிறாள் )பாட்டியிடம் பேச வேண்டும் என்றாள்.நானும் அம்மாவிடம் கைபேசியை கொடுத்தேன்.அவர்களும் நன்றாக பேசி விட்டு நாளை இந்நேரத்திற்கு எல்லாம் வீட்டிற்க்கு வந்து விடுவோம் என்று குழந்தையிடம் சொல்லி கொண்டு இருந்தார் அம்மா பேசி முடித்து விட்டு மாத்திரையுடன் பால் ஊற்றி  கொடுத்தேன்.பக்கத்தில் நடந்த நகைசுவையான சம்பவத்தை சொல்லி என்னை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார்.இருபது நிமிடம் இப்படியே கழிந்தது.சற்று நேரத்தில்,எனக்கு ஒரு மாதிரியாக இருக்குடா அம்மா என்னிடம் சொன்னார்.சரிம்மா அப்படியே படு நான் நர்சை கூட்டி கொண்டு வரேன்.டாக்டர் வந்துடவர் சார் கொஞ்ச நேரம் இருங்க என்றார் நர்ஸ்.அம்மாவிடம் ஓடினேன் நான்.மூச்சு விட சிரமம் ஏற்பட்டு கால்கால்களிருந்து  இழுத்து கொண்டு மூன்று முறை உலுக்கிய அந்த மூச்சு சட்டெனெ நின்றது.நான் கதறி அழுத்து கொண்டே அம்மாவின் படுக்கை தள்ளி கொண்டே ஓடுகிறேன் icu வார்டுக்கு என்னுடன் நர்ஸ் மற்றும் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மனிதாபத்துடன் ஓடி வருகிறர்ர்கள்.என்னை வெளியே நில்லுங்கள் என்று சொல்லி விட்டு முதல் உதவி செய்ய ஆரம்பித்தனர் அங்கு இருந்த மருத்துவர்கள்.எனக்கு என்ன நடக்குதுன்னு ஒன்றுமே புரிய வில்லை கண்களில் கண்ணீரும் அழு குரலும் மட்டும்தான் என்னால் உணர முடிகிறது.என் அருகில் சொந்தங்கள் என்று யாரும் இல்லை இன்றைய தினத்தை போல அடக்கப்பட்ட நீர் குமிழியை போல் அடித்து கொண்டு வந்தது அழுகை அதன் பின் நிறைய  பயத்துடன்  என் அண்ணனிடம் தகவல் சொல்லி வர சொன்னேன்.அவரும் வந்து சேர்ந்தார்.இருண்ட உலகத்தின் இரவல்லம் மரணத்தின் தருவாய் என்னவென்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்.நாடி துடிப்பு இருதய துடிப்பு அனைத்தும் மாறி மாறி ஆட்டம் காண்பித்தது.காலை  10.24 வரை கடைசியாக அம்மாவின் மூச்சற்ற உடலை காண்பித்தனர் மருத்துவர்.சார் ஒன்றும் செய்ய முடிய வில்லை மன்னிக்கவும் என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த உடலுக்கு சென்று விட்டனர் மருத்துவர்கள்.

என் அம்மாவின் மரணம் நிகழ்ந்த நாள் (டிசம்பர் 23 காலை 10.24 )வைகுண்ட் ஏகாதேசி எனக்கு சொர்க்கத்தில் நம்பிக்கை இல்லைதான் ஆனால் என் அம்மா அந்த சொர்கதிற்க்குதான் செல்ல வேண்டும் என்னுடைய ஒரு வித ஆசை 

வந்தவர்களும் இதை சொல்லித்தான் ஆறுதல் சொல்லுகிறார்கள் 

 இருப்பினும் அம்மாவின் மரணத்துக்குப் பின்

ஏற்பட்டு கொண்டு இருக்கும் தனிமையின் பயத்தை
தத்துவ புத்தகங்களை கொண்டுதான்  நிரப்பி கொண்டு இருக்கிறேன் கண்ணீருடன் 
'ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)


No comments:

Post a Comment